ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வங்கதேச சுற்றுப் பயணத்தில் இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வெற்றி பெற்ற வங்கதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஓப்பனிங் இறங்கினர். 20 ஓவர் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ஒருநாள் போட்டிக்கு களமிறங்கியதால், எப்படி விளையாடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
மேலும் படிக்க | இந்திய அணியில் இருந்து ரிஷப் பந்த் நீக்கம்! காரணம் இதுதான்!
17 பந்துகளை எதிர்கொண்ட ஷிகர் தவான் 7 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, ஷகிப் அல்ஹசன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து விராட்கோலியும் 9 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அவரது விக்கெட்டையும் ஷகிப் அல்ஹசனே கைப்பற்றினார். ஸ்ரேயாஸ் அய்யர் 24 ரன்கள் எடுக்க, கே.எல்.ராகுல் மட்டுமே வங்கதேச அணியின் பந்துவீச்சை பயமில்லாமல் அடித்து ஆடிக் கொண்டிருந்தார்.
மிடில் ஆர்டரில் இறங்கிய அவர், 70 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் 19 ரன்கள் எடுக்க மற்ற வீர ர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து நடையைக் கட்டினர். குறிப்பாக, வங்கதேச அணியின் ஷகிப் அல்ஹசன் பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய அணியினர் தடுமாறினர். அவர் மட்டும் இந்திய அணியின் 5 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். முடிவில் இந்திய அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மேலும் படிக்க | India vs Bangladesh: முதல் ஒருநாள் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ