நடிகையுடன் கிரிக்கெட் வீரர் திடீர் திருமணம்... சானியா மிர்ஸா உடன் விவாகரத்து!?

Shoiab Malik Marriage: பிரபல கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை ஒருவரை திருமணம் செய்து அதன் புகைப்படங்களை இன்று வெளியிட்டார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 20, 2024, 01:59 PM IST
  • சோயிப் மாலிக் - சானியா மிர்ஸா ஜோடி விவாகரத்து பெற்றது என தகவல்.
  • இந்த ஜோடிக்கு 2010ஆம் ஆண்டில் திருமணமானது.
  • இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார்.
நடிகையுடன் கிரிக்கெட் வீரர் திடீர் திருமணம்... சானியா மிர்ஸா உடன் விவாகரத்து!? title=

Shoiab Malik Sana Javed Marriage: பிரபலங்கள் திருமணம் செய்வது என்பதே அவர்களின் ரசிகர்களுக்கும், அவர்களை அதிகம் பின்தொடர்பவர்களும் குஷியாகிவிடுவார்கள். அந்த வகையில் இரண்டு பிரபலங்களும் ஜோடி சேர்க்கிறார்கள் என்றால் டபுள் குஷி எனலாம். உதாரணத்திற்கு பல பேரை சொல்லலாம். இதே மாதிரிதான், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் - இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஆகியோர் திருமணம் செய்துகொள்ளும் போது பலரும் அதனை கொண்டாடினர் எனலாம்.

மாலிக் - மிர்ஸா ஜோடி

இந்தியா - பாகிஸ்தான் காரணி ஒருபுறம், இரண்டு விளையாட்டு பிரபலங்கள் என இரு நாடுகளிலும் அவர்களின் திருமணத்தின் போது ஏகோபித்த வரவேற்பு இருந்தது. இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பாரம்பரிய முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பாகிஸ்தானின் சியால்கோட்டில் வலிமா விழாவை நடத்தினர். மாலிக் மற்றும் மிர்சா ஜோடிக்கு 2018ஆம் ஆண்டில் இஷான் என்ற மகனும் பிறந்தார்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு மேலாக மாலிக் - மிர்ஸா ஜோடி இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அவர்களுக்கிடையே பிரச்னை நிலவியதாக கூறப்பட்டது. மேலும், மாலிக் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், இதனால் மிர்ஸாவுக்கும் மாலிக்கிற்கும் விவாகரத்தாக (Shoiab Malik Sania Mirza Divorce) உள்ளது என தகவல்கள் அடிக்கடி வெளியாகி வந்தன. அதற்கேற்றாற் போல், சானியா மிர்ஸாவும் அடிக்கடி விடை தெரியாத பதிவுகளை பதிவிடுவார். அதன்படி, சில நாள்களுக்கு முன் சானியா மிர்ஸா விவாகரத்து குறித்து மறைமுகமாக ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். 

மேலும் படிக்க | சஞ்சு சாம்சன் வீணாக்கிய கோல்டன் வாய்ப்பு..! இனி கேம் ஓவர் - பிசிசிஐ முடிவு

சானியா மிர்ஸாவின் பதிவு

அதில்,"திருமணம் கடினமானது, விவாகரத்து கடினமானது, இதில் உங்களுக்கானதை தேர்ந்தெடுங்கள். உடல் பருமன் கடினமானது, உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதும் கடினமானது, இதில் உங்களுக்கானதை தேர்ந்தெடுங்கள். கடனில் இருப்பது கடினம், நிதி ரீதியாக ஒழுக்கமாக இருப்பது கடினம், இதில் உங்களுக்கானதை தேர்ந்தெடுங்கள்.... வாழ்க்கை எளிதாக இருக்காது, அது எப்போதும் கடினமாக இருக்கும். ஆனால் நமக்கு கடினமானதை நாம் தேர்வு செய்யலாம், புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்" என பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை (S) திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமண புகைப்படங்களை சோயிப் மாலிக் அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இதுவரை மாலிக் - மிர்ஸாவுக்கு இடையில் விவாகரத்தானதா என்பது குறித்த தெளிவான தகவல் இரு தரப்பிலும் தெரிவிக்கப்படாத நிலையில், மாலிக் திருமணம் செய்துகொண்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும், மாலிக் நெருக்கமாக இருக்கும் நடிகை என கிசுகிசுக்கப்பட்ட நடிகையும் இந்த சனா ஜாவேத்தான் என்பது நினைவுக்கூரத்தக்கது. 

அப்போதே ஆதரவு...?

குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டில் சனா ஜாவேத் மீது துணை நடிகர்கள் உள்ளிட்ட திரைப்பட தொழிலாளர்கள் தங்களிடம் மிக கடுமையாக அவர் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டை வைத்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், சோயிப் மாலிக் அப்போதே சனாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ட்வீட் செய்திருந்தார். மார்ச் மாதம் 2022ஆம் ஆண்டில் பதிவிட்ட அந்த பதிவில்,"சனா ஜாவேதை எனக்கு கொஞ்ச காலமாகவே தெரியும், அவருடன் பலமுறை பணிபுரியும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது, என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தின் மூலம், அவர் என்னிடமும், சுற்றியுள்ளவர்களிடமும் எப்போதும் கனிவாகவும் மரியாதையாகவும் இருந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.

மேலும், சானியா மிர்ஸாவை திருமணம் செய்துகொள்வதற்கு முன், சோயிப் மாலிக் ஆயிஷா சித்திக் என்பவரை திருமணம் செய்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை இவர்கள் திருமண உறவில் இருந்ததாக கூறப்பட்டது. இருப்பினும், இதனை சோயிப் மாலிக் தொடர்ந்து மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Shivam Dube: டி20 உலக கோப்பையில் ஷிவம் துபே? டிராவிட் சொன்ன முக்கிய செய்தி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News