ஆப்கானிஸ்தான் அணியில் ஜடேஜா... உலகக் கோப்பையில் முக்கிய பொறுப்பாம்!

ICC World Cup 2023: இந்திய மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட இந்திய அணியின் முன்னாள் கேப்டனை ஆப்கானிஸ்தான் அணி தங்களின் ஆலோசகராக நியமித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 2, 2023, 08:23 PM IST
  • ஆப்கானிஸ்தான் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
  • இந்த தொடரில் நிச்சயம் ஒரு பெரிய அணியை அது வீழ்த்தும் என கருதப்படுகிறது.
  • அதன் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை குவிப்பார்கள் என கணிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணியில் ஜடேஜா... உலகக் கோப்பையில் முக்கிய பொறுப்பாம்! title=

ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து அணிகளும் வெறித்தனமாக தயாராகி வருகின்றன. 5 முறை சாம்பியன் ஆஸ்திரேலியா, 2 முறை சாம்பியன் இந்தியா, நடப்பு சாம்பியன் இந்தியா, தலா 1 முறை கோப்பையை வென்றுள்ள பாகிஸ்தான், இலங்கை மற்றும் கோப்பையை முதல்முறையாக வெல்ல நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இந்த 13ஆவது ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. 

ஆப்கானின் எழுச்சி

வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி தங்கள் பெயரை உலகக் கோப்பை அழுத்தமாக பதிவு செய்ய காத்திருக்கின்றன. இதில் வங்கதேசம் உலகக் கோப்பையின் பல போட்டிகளில் இந்தியா உள்பட வலுவான அணிகளை வீழ்த்திய வரலாறு உண்டு என்றாலும் பெரிய அளவில் சோபித்ததில்லை. 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் காலிறுதிப்போட்டி வரை வந்ததே அந்த அணியின் சிறப்பான பங்களிப்பாகும். zeenews.india.com/tamil/sports/2003-world-cup-is-so-special-for-team-india-than-1983-and-2011-check-reason-here-466153

அப்படியிருக்க, தற்போது ஆப்கானிஸ்தான் அணியும் ஒருநாள் போட்டிகளில் 'பெரிய' அணிகளை வீழ்த்தும் வல்லமைப் படைத்ததாகவே கூறப்படுகிறது. தற்போதைய ஆட்டச் சூழலில் எந்த அணி வேண்டுமானாலும், எந்த அணியையும் வீழ்த்தலாம் என்பதே நிதர்சனமான ஒன்றாகும். ஆசிய கோப்பையின் குரூப் சுற்றில் இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தானின் பேட்டிங் என்பது சமீப காலங்களில் சிறந்த ஒருநாள் போட்டியாக கூறலாம். இருப்பினும், சில துரதிருஷ்டவசமான காரணத்தினால் அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியைச் சந்தித்தது. 

ஆப்கான் மீதான நம்பிக்கை

அந்த போட்டியை பார்த்த அனைவரும் கூறியது ஒன்றே ஒன்றுதான். ஆப்கானிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் கண்டிப்பாக ஒரு 'பெரிய' அணியை அதுவும் முக்கியமான போட்டியில் வீழ்த்தும் என்பதாகதான் இருந்தது. அந்த அளவிற்கு ஆப்கானிஸ்தானின் ஆட்டம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும், சுழலுக்கு சாதகமான இந்திய மண்ணில் ரஷித் கான் - முஜிபூர் ரஹ்மான் - நபி உள்ளிட்ட உலகத் தர ஸ்பின்னர்கள் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதில்லை மாற்றுக் கருத்தில்லை. 

மேலும் படிக்க | இந்த உலகக் கோப்பையின் டாப் 5 கோடீஸ்வர வீரர்கள் இவர்கள்தான்... லிஸ்டில் 2 இந்தியர்கள்

பேட்டிங்கில் அந்த அணி சிறப்பாக விளையாடினாலும் சரியான நேரத்தில் சரியான பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியாமல் திணறுவதே அந்த அணியின் பலவீனமாக உள்ளது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரானின் அதிரடியான பேட்டிங், நபியின் ஆல்-ரவுண்டிங் ஃபெர்பாமன்ஸ் இந்த தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஆனால், அணி இன்னும் தீவிரமாக செயல்பட பயிற்சியாளர்களில் ஒருவர் இந்திய மண்ணுக்கு நெருக்கமானவராக இருந்தால் கூடுதல் நன்மை என்பதை உணர்ந்து, ஒரு மூத்த இந்திய கிரிக்கெட் வீரரை அந்த அணி உலகக் கோப்பை தொடருக்கான அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மூத்த வீரருமான அஜய் ஜடேஜா உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் ஆலோசகராக செயல்படுவார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) அறிவித்துள்ளது. மேலும், அஜய் ஜடேஜா, ரஷித் கான் மற்றும் ஆப்கன் வீரர்கள் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படத்தையும் அந்த அணி தனது x பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  

யார் இந்த அஜய் ஜடேஜா?

அஜய் ஜடேஜா 13 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து மொத்தம் 196 போட்டிகளில் விளையாடியுள்ளார். மூன்று உலகக் கோப்பைகளில் அவர் விளையாடியுள்ளார். அவர் மொத்தம் ஒருநாள் அரங்கில் 6 சதங்கள் மற்றும் 30 அரைசதங்களுடன் 37.47 சராசரியில் 5359 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்கு ஒருநாள் வடிவத்தில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் எட்டாவது இடத்தில் அஜய் ஜடேஜா உள்ளார்.

மறக்க முடியாத இன்னிங்ஸ்

அஜய் ஜடேஜாவின் மறக்கமுடியாத ஒருநாள் வடிவ இன்னிங்ஸ் என்றால், அது 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான காலிறுதிப்போட்டிதான். பெங்களூரு நடைபெற்ற அந்த போட்டியில் 25 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தது ஜடேஜா அசத்தினார். இதில் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸுக்கு எதிராக கடைசி இரண்டு ஓவர்களில் 40 ரன்கள் எடுத்ததும் அடங்கும். அவர் 1992ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்காக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26.18 சராசரியில் 576 ரன்கள் எடுத்தார். இதில் அவர் நான்கு அரை சதங்கள் மற்றும் சிறந்த தனிநபர் ஸ்கோரான 96 ரன்கள் எடுத்தார்.

சூதாட்ட புகார்

1988ஆம் ஆண்டு ஹரியானா அணிக்காக முதல்தரப் போட்டியில் அறிமுகமான ஜடேஜா, 111 முதல்தர மற்றும் 291 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி உள்ளார். சூதாட்ட புகாரில் சிக்கி ஐந்தாண்டு தடை விதிக்கப்பட்டதால் அவரது சர்வதேச வாழ்க்கை தடைபட்டது. ஜடேஜா நடிகராக சில படங்களில் பணியாற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட அனுமதி கோரிய அவரது மனு டெல்லி உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டாலும், ஜடேஜா மீண்டும் டெல்லிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடினார். பின்னர் ராஜஸ்தான் அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளராக ஆனார். பின்னர், ஜடேஜா கிரிக்கெட் வர்ணனையில் இறங்கினார். 

மேலும் படிக்க | ஒரே நாளில் 2 போட்டியில் விளையாடும் இந்திய அணி... நேரலையில் இலவசமாக பார்ப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News