இந்த 3 வீரர்களால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறலாம்

ICC Men's T20 World Cup: இந்த 3 வீரர்கள் செயல்திறன் சரியாக இல்லாததால், டி20 உலகக் கோப்பை யின் இந்திய அணியில் சில மாற்றங்களை தேர்வாளர்கள் செய்யலாம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 23, 2022, 06:54 PM IST
  • டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கலாம்.
  • இந்திய அணியின் 3 வீரர்கள் ஃபார்மில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
  • இந்த 3 வீரர்கள் டி20 உலகக் கோப்பையில் விளையாடினால், இந்திய அணிக்கு கடினம்
இந்த 3 வீரர்களால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறலாம் title=

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி தற்போது சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. இந்த டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியின் மூலம் இந்திய அணியின் 3 வீரர்கள் ஃபார்மில் இல்லை என்பதை காட்டியுள்ளது. டி20 உலகக் கோப்பையில் இந்த 3 வீரர்களையும் தேர்வாளர்கள் தேர்வு செய்துள்ளனர். ஆனால் அவர்களின் தற்போதைய ஃபார்ம் மிகவும் மோசமாக உள்ளது. இந்த 3 வீரர்கள் டி20 உலகக் கோப்பையில் விளையாடினால், அவர்களின் மோசமான ஆட்டத்தால் இந்திய அணி குரூப் பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கடினம். இதுபோன்ற சூழ்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் மாற்றங்களைச் செய்ய தேர்வாளர்களுக்கு வாய்ப்பு உள்ளதால், டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் இருக்கலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிகின்றன. 

ஐசிசியின் விதிகளின்படி, டி20 உலகக் கோப்பைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, அனைத்து நாடுகளும் தங்கள் 15 பேர் கொண்ட அணிகளில் மாற்றங்களைச் செய்யலாம். அதாவது அணியில் பங்கேற்கும் 15 வீரர்களில் மாற்றம் செய்துக்கொள்ளலாம். எந்த கிரிக்கெட் வீரரையும் தேர்வு செய்யலாம் அல்லது நீக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், எந்த வீரருக்கு உலககோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் என்பது குறித்து பார்ப்போம். 

புவனேஷ்வர் குமார்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அதேநேரத்தில் புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இவரின் ஆட்டத்தை பார்த்தால் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இந்த வீரருக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. எனவே புவனேஷ்வர் குமாரின் செயல்பாடு மோசமாக இருப்பதாக இந்திய அணியின் தேர்வாளர்கள் கருதினால், அவர் டி20 உலகக் கோப்பையின் 15 பேர் கொண்ட அணியில் தீபக் சாஹரை சேர்த்து, புவனேஷ்வர் குமாரை வெளியேற்றலாம்.

மேலும் படிக்க: ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்!

யுஸ்வேந்திர சாஹல்:

மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலின் பந்துகள் அபாரமாக வீசப்பட்டன. யுஸ்வேந்திர சாஹல் 3.2 ஓவரில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன் போது அவர் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். யுஸ்வேந்திர சாஹலின் ஆட்டத்தைப் பார்க்கும்போது, ​​ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அவரை எதிர்கொள்வதில் சிரமம் இருந்ததாக தெரியவில்லை. டி20 உலகக் கோப்பையில் யுஸ்வேந்திர சாஹல் இதேபோன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அவர் இந்திய அணியின் கோப்பை கனவை மூழ்கடிக்கலாம். டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் ரவி பிஷ்னோயை சேர்த்து, யுஸ்வேந்திர சாஹலுக்கு வீட்டுக்கு அனுப்ப தேர்வாளர்கள் வாய்ப்பு உள்ளது. யுஸ்வேந்திர சாஹலை விட ரவி பிஷ்னாய் தற்போது சிறந்த டி20 பந்துவீச்சாளர் என்பது அவரின் சமீபத்திய ஆட்டங்கள் தெரிவிக்கின்றன. ரவி பிஷ்னோய் இதுவரை இந்தியாவுக்காக 10 டி20 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஹர்ஷல் படேல்:

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்ஷல் படேல் இடம் பெறுவது கடினம். ஹர்ஷல் படேல் பந்து வீசும் விதத்தைப் பார்த்தால், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அவரின் பந்துவீச்சு எடுபடாது என்ற தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் பந்துவீச்சு சரியாக இல்லாதாதால், இந்திய அணி 208 ரன்கள் எடுத்திருந்தும் தோல்வியை தழுவியது. 4 ஓவர்கள் வீசிய ஹர்ஷல் படேல் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் முகமது ஷமியை சேர்த்து, ஹர்ஷல் படேலுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம். டி20 உலகக் கோப்பைக்கான தொடருக்கு ஹர்ஷல் படேலுடன் ஒப்பிடுகையில் முகமது ஷமி சிறந்த பந்துவீச்சாளர் ஆவார். எதுவாக இருந்தாலும், டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் மாற்றங்களைச் செய்ய தேர்வாளர்களின் கையில் தான் உள்ளது.

மேலும் படிக்க: IND vs AUS: புவனேஷ்வர் குமாருக்கு பை..பை! இந்த வீரருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News