ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த, அதாவது சென்னையைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய திருமணம் ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்தால் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் தொடக்க போட்டிகளில் கலந்து கொள்ளாத மேக்ஸ்வெல், தற்போது அணியினருடன் இணைந்துள்ளார்.
மேலும் படிக்க | வைரலாகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகையின் ரியாக்ஷன் - அவர் யார் தெரியுமா?
அவர் ஆர்சிபி அணியிருக்கும் திருமண பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். அதில் ஆர்சிபி அணியினர் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கலந்து கொண்டார். ஐபிஎல் போட்டியில் மிக மோசமாக விளையாடி வரும் விராட் கோலி, பார்ட்டியில் போட்ட ஆட்டம் வைரலாகியுள்ளது. கோலி ஃபார்முக்கு திரும்ப வேண்டும், அவர் பழைய கோலியாக களத்துக்கு வர வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வரும் சூழலில், விராட் கோலி புத்துணர்ச்சியுடன் இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
Virat kohli dancing in Glenn Maxwell wedding part video @imVkohli @Gmaxi_32 #ViratKohli #wedding #party pic.twitter.com/iHj50MLmg9
— Sarthak (@Sarthak18s) April 27, 2022
தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் அவர், ஓய்வெடுக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர். கெவின் பீட்டர்சன் கோலியின் ஃபார்ம் குறித்து பேசும்போது, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஸ்டாராக இருக்கும் வீரர்கள் இதுபோன்ற கடினமான சூழல்களை எதிர்கொள்வது இயல்பான ஒன்று. ஆனால், விராட் கோலியை இப்படி பார்க்க நானும் விரும்பவில்லை. நிச்சயமாக அவர் ஃபார்முக்கு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்தார். ரவிசாஸ்திரி பேசும்போது, கோலிக்கு கட்டாயம் ஓய்வு தேவை என வலியுறுத்தியுள்ளார். ஓய்வெடுக்காமல் விளையாடினால், இதுபோன்ற இன்னிங்ஸை மட்டுமே அவரிடம் இருந்து எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் கோலி நடனமாடிய வீடியோ வெளியாகியிருப்பது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேக்ஸ்வெல்லின் திருமண பார்ட்டியில் இருந்தாவது புத்துணர்ச்சி பெற்று மீண்டும் கோலி பார்முக்கு திரும்பட்டும் என ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். இதேபார்ட்டியில் கலந்து கொண்ட பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளசிஸூம், நடனமாடி அசத்தினார். 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 5 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR