தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்!
2018-ஆம் ஆண்டில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட கிரிக்கெட் அணிகளை எதிர்கொண்டது. இப்போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய விராட் கோலி, இந்தாண்டில் மொத்தமாக 2,653 ரன்கள் குவித்துள்ளார். குவிக்கப்பட்ட ரன்கள் 69.81 ரன் சராசரியைப் பெற்றுள்ளார், அதே வேலையில் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் மூலம் இந்தாண்டில் அதிகபட்சமாக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். முன்னதாக கடந்த 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளிலும் அதிக ரன் குவித்தோர் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பெற்றிருந்ததார்.
கடந்த 2016-ம் ஆண்டில் விராட் கோலி 2,595 ரன்களும், 2017-ம் ஆண்டில் 2,818 ரன்களும் விராட் கோலி குவித்து சாதனை படைத்திருந்தார். ஆக தொடர்ந்து 3 ஆண்டுகளாக அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையினை இவர் பெற்றுள்ளார்.
மேலுல், ஒருநாள் போட்டிகளில் சாதனை படைத்தவர்கள் பட்டியலினை இன்று ICC வெளியிட்டுள்ளது.
Top performers of 2018 - Men's ODIs
Most runs : @imVkohli - 1202
High score: @FakharZamanLive - 210* v Zimbabwe, Bulawayo
Most wickets: @rashidkhan_19 - 48
Best figures: @ImranTahirSA - 6/24 v Zimbabwe, Bloemfontein#BestOf2018 pic.twitter.com/XZrRj7Hgwy— ICC (@ICC) December 31, 2018
இந்த பட்டியலின் படி 2018-ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஒருநாள் போட்டிகளில்...
- அதிக ரன் குவித்த வீரர் - விராட் கோலி (1202 ரன்கள்)
- அதிகபட்ச ரன் - பாக்கர் ஜாமான்(பாக்கிஸ்தான்) -201* vs ஜிம்பாபேவே
- அதிக விக்கெட் - ரஷிட் கான் (அக்கானிஸ்தான்) - 48 விக்கெட்டுகள்
- சிறந்த பந்துவீச்சு - இம்ரான் தாகிர்(தென்னாப்பிரிக்கா) -6/24 vs ஜிப்பாபேவே