இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷம் தான் இந்திய அணியின் பலம் என்று முன்னாள் இந்திய கிர்கெட் அணி சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. அதில் முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்துள்ளார். இது அவரது 200-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்து 2-வது இடத்தில் இருந்த ரிக்கி பாண்டிங்கை முந்தினார் விராட் கோலி.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது, 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தான் விராட் கோலி இந்திய அணிக்கு அறிமுகம் ஆனார். அப்போது அவர் கடும் ஆக்ரோஷ்த்துடன் விளையாடி வந்தார். பலர் அவரது ஆக்ரோஷ்த்தை குறைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
ஆனால் இன்று அவரது ஆக்ரோஷமே இந்திய அணியின் பலமாக அமைந்துள்ளது. தற்போதைய இந்திய அணியில் சிறந்த ஸ்பின் பவுலர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.
இவ்வாறு பேசினார்.