Vi Recharge Plans: நீங்கள் ஒரு வோடபோன் ஐடியா (Vodafone Idea) வாடிக்கையாளராக இருந்தால், ரூ .400 வரையிலான திட்டத்தில் தரவு, இலவச அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் OTT இலவச தளம் போன்றவற்றை கொண்ட ஒரு மலிவான திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு சிறப்பு.
இன்று, வோடபோன் ஐடியாவின் (Vi) அத்தகைய ஒரு திட்டத்தைப் பற்றிய தகவல்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். இந்த திட்டத்தின் விலை 405 ரூபாய் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். ஆம், Vi 405 திட்டத்தில் தரவு தவிர மேலும் பல அம்சங்கள் உள்ளன.
Vi 405 திட்டம்:
வாடிக்கையாளர்கள் ரூ .405 வோடபோன் ஐடியா திட்டத்தில் வேற எந்தவொரு நெட்வொர்க்கிலும் இலவச அழைப்பு வசதி தவிர, 90GB டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பெறுவார்கள், இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்களாகும்.
இந்த வோடபோன் 405 திட்டம் 1 ஆண்டு இலவச ZEE5 பிரீமியம் OTT தளத்தை வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், Vi மூவிஸ் & டிவி தளத்தையும் இலவசமாக பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ 401 திட்டம்:
வோடபோனின் போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவும் (Realince Jio) இந்த விலையில் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது மற்றும் அதன் விலை ரூ .401 ஆகும். இந்த விலையில் ஜியோ உங்களுக்கு என்ன சலுகை வழங்குகிறது, இதைப் பற்றிய தகவல்களை உங்களுக்குத் தருகிறோம்.
ரிலையன்ஸ் ஜியோ ரூ .401 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 3GB டேட்டா வழங்கப்படும், மேலும் 6GB கூடுதல் அதிவேக தரவுகளும் வழங்கப்படுகின்றன. இந்த ஜியோ திட்டத்தின் மூலம், ஜியோ டூ ஜியோ (லேண்ட்லைன் உட்பட) வரம்பற்ற அழைப்புகள் மற்றும் பிற நெட்வொர்க்குகளில் தினமும் 1000 நிமிடங்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ALSO READ | ரூபாய் 399க்கு பல புதிய திட்டங்கள் அறிமுகம்; உங்களுக்கு எது பொருந்தும்?
பிற நன்மைகள்
இந்த திட்டத்துடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி (Hot Star VIP) தளம் மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்ட பிற ஜியோ பயன்பாடுகளும் இலவசமாக கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR