யார் இந்த இளம் வீரர் ரிஷப் பந்த்? இவரின் முழுவிவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த். இவரின் வரலாறு என்ன? பார்ப்போம்.

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Sep 11, 2018, 09:16 PM IST
யார் இந்த இளம் வீரர் ரிஷப் பந்த்? இவரின் முழுவிவரம் உள்ளே

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் ரிஷப் பந்தின் முழுப்பெயர் ரிஷப் ராஜேந்திர பந்த், இவர் 1997 ஆமா ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதியில் பிறந்தார். இவர் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தை சேர்ந்தவர். 

இவர் உள்நாட்டு ஆட்டத்தை பொருத்த வரை 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி 2015-2016 ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பைத் தொடரில் அறிமுகமானார். அதே வருடத்தில் நடைபெற்ற 2015-2016 ஆம் ஆண்டுக்கான விஜய் அசாரே போட்டித் தொடரில் விளையாடினார். 

2016-2017 ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பைத் தொடரில் மகாராஷ்டிரா மாநில அணிக்கு எதிராக 308 ரன்கள் எடுத்தார். இதே தொடரில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக 48 பந்துகளில் சதம் அடித்தார்.

2015-2016 ஆம் ஆண்டுக்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் கிடைத்தது. இதில் 18 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து சாதனை செய்தார். இதே தொடரில் சதம் அடுத்து 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணிய அரையிறுதிக்கு அழைத்து சென்றார். 

இவரின் ஆட்டத்தை பார்த்த டெல்லி அணி, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபில்எல் தொடரில், இவரை ரூ. 1.9 கோடிக்கு ஏலம் எடுத்தது. கடந்த ஐபிஎல்(2018) சீசனில் 63 பந்துகளில் 128 ரன்கள் எடுத்தார். இது இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டி மூலம் இந்திய சர்வதேச அணியில் இடம் பிடித்தார். 

இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். இந்த அணிக்கு எதிராக தனது முதல் சதத்தை அடித்துள்ளார். 

இவர் ஐபில் தொடரில் மொத்தம் 38 போட்டிகளில் விளையாடி 1248 ரன்கள் அடித்துள்ளார். அதிகபட்ச ரன்கள் 128 ஆகும்.

இவர் நான்கு சர்வதேச டி-20 போட்டியில் விளையாடி 73 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்ச ரன்கள் 38 ஆகும்.