கனடாவின் டொரொண்டோவில் உலக அளவிலான குள்ளமான மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியினர் 37 பதக்கங்களை வென்று குள்ளமான மாற்றுத்திறனாளிகள் நாட்டை பெருமைப்படுத்தி உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் 24 நாடுகளில் இருந்து 400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழகத்திலிருந்து 3 வீரர்கள் கலந்துகொண்டனர்.
இந்த போட்டியில் தமிழக சார்பில் மனோஜ், விவசாயி கணேசன், செல்வராஜ் என மூன்று பேர் கலந்துக்கொண்டனர். இவர்கள் மூன்று பெரும் தமிழகம் மற்றும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
உலக அளவிலான குள்ளமான மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில், இந்திய வீரர்கள் 15 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களை வென்றது. இதன் மூலம் இந்த போட்டியில் முதல் 10 தரவரிசையில் இந்திய அணியும் இடம் பிடித்தது.
இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் சாதனைகள் செய்த வீரகளுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
Indian team hit a jackpot with record 37 medals (15 gold) at World dwarf games also known as 'olympics of little people' held in Toronto pic.twitter.com/KTYxNzA29X
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) August 17, 2017
Standing tall. The Indian contingent that participated in the 7th edition of World Dwarf Games in Guelph bagged 37 medals,including 15 golds pic.twitter.com/LkbMsiUgoU
— Vikas Swarup (@VikasSwarup) August 16, 2017