Cricket: 'நீங்கள் ஒரு பந்து வீச்சாளர் அல்ல' ஹர்ஷா போக்லேவை டிவிட்டரில் வம்புக்கு இழுக்கும் ஷேர்ன் வார்ன்

ஐ.பி.எல் 2020 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்  ஷேர்ன் வார்ன் (Shane Warne) மற்றும் ஹர்ஷா போக்லே (Harsha Bhogle) ஆகியோர் ட்விட்டரில் காலை வாரிக் கொள்கின்றனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2020, 11:05 PM IST
  • Shane Warne மற்றும் Harsha Bhogle இருவரும் ட்விட்டரில் மோதிக் கொள்கின்றனர்.
  • 90களுடன் ஒப்பிடும்போது ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் மிகவும் சிறியது என்றும் ஹர்ஷா எழுதினார்.
  • "ஆம், அது வீரர்களின் திறமையை காண்பித்தது. நீங்கள் அங்கு ஒரு பந்து வீச்சாளராக செயல்படவில்லை. கடின உழைப்பு !!!" என்று பதிலடி கொடுத்தார்...
Cricket: 'நீங்கள் ஒரு பந்து வீச்சாளர் அல்ல' ஹர்ஷா போக்லேவை  டிவிட்டரில் வம்புக்கு இழுக்கும் ஷேர்ன் வார்ன்  title=

ஐ.பி.எல் 2020 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்  ஷேர்ன் வார்ன் (Shane Warne) மற்றும் ஹர்ஷா போக்லே (Harsha Bhogle) ஆகியோர் ட்விட்டரில் காலை வாரிக் கொள்கின்றனர்.  

ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab) மோதிய 2020ஐபிஎல் போட்டியின் போது, பிரபல கிரிக்கெட் வர்ணணையாளர் ஹர்ஷா போக்லே மற்றும் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேர்ன் வார்ன் ஆகியோர் சமூக ஊடகங்களில் மோதிக் கொண்டனர்.  

ஷார்ஜாவில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சரியான தொடக்கத்தை வழங்கினர்.

ராகுல் 54 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார், அகர்வால் தனது முதல் ஐபிஎல் சதத்தை  எடுத்தார்.

ஐ.பி.எல் வரலாற்றில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு மிக அதிகமான விக்கெட் கூட்டணியை இருவரும் உருவாக்கினர். இவர்களின் உதவியால் அணி 223/2 என்ற ஸ்கோரை பெற்றது.  
முதல் இன்னிங்ஸ் பற்றி ட்விட்டரில் பெருமையாக குறிப்பிட்டு, கிங்ஸ் லெவன் அணியின் பேட்ஸ்மேன்களைப் பாராட்டினார், அதே நேரத்தில் 90களுடன் ஒப்பிடும்போது ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் மிகவும் சிறியது என்றும் ஹர்ஷா கொளுத்திப் போட்டார்.  

"இது வெறும் ஆட்டம் அல்ல. தரமான பேட்டிங். 90களில் நாங்கள் கிரிக்கெட் விளையாடும்போது மைதானம் அவ்வளவு சிறியதாகத் தெரியவில்லை!!" அவர் ட்விட்டரில் எழுதினார்.

இதற்கு பதிலளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்  ஆலோசகரான ஷேர்ன் வார்ன் ஹர்ஷா போக்லேயின் பதிவை ட்வீட் செய்து, "ஆம், அது வீரர்களின் திறமையை காண்பித்தது. நீங்கள் அங்கு ஒரு பந்து வீச்சாளராக செயல்படவில்லை. கடின உழைப்பு !!!"

ஷேர்ன் வார்னின் பதிவுக்கு ஹர்ஷா பதிலளித்தார். அதையடுத்து மோதல் வெளிச்சத்துக்கு வந்தது.  "அப்போது இருந்த அணுகுமுறை வேறுபட்டது. 90களில் ஒரு நாள் போட்டி கிரிக்கெட்டில் 108 இன்னிங்ஸ்களில், மொத்த சராசரி 227!" என்று சூடு கொடுத்தார்.

ஹர்ஷாவின் சூட்டுக்கு கூலாக பதிலளித்த  ஷேர்ன் சொன்னார், "புள்ளிவிவரங்கள் உண்மையைச் சொல்லவில்லை. எல்லா நாடுகளிலிருந்தும் சிறந்த பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள். அதோடு முற்றிலும் மாறுபட்ட ஆடுகளம்! எப்படியிருந்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் இன்னும் இதில் உள்ளனர்! 210 ஒரு சாதாரண ஸ்கோர் தான்".

224 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மட்டை வீசிய அணியின் ராகுல் திவேஷியாவின் சிக்ஸர்கள், சஞ்சு சாம்ஸன் மற்றும் ஸ்மித்தின் அதிரடி ஆட்டம், ஆர்ச்சரின் சிக்ஸர்கள் என ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் 2020 போட்டியின் லீக் ஆட்டத்தில், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது சிறப்பான வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 

Also Read | ஐ.பி.எல்லில், கடைசி 5 ஓவர்களில் ரன்களை குவித்த 5 அணிகள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News