யுவராஜ்சிங் - ஹசல் கீச் சங்கீத் விழா: விராட்டின் நடனம் வீடியோ

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மற்றும் மாடல் அழகியான ஹசல் கீச்க்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது, இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற சங்கீத் விழாவில் விராட் கோலி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர். 

Last Updated : Nov 30, 2016, 12:09 PM IST
யுவராஜ்சிங் - ஹசல் கீச் சங்கீத் விழா: விராட்டின் நடனம் வீடியோ  title=

சண்டிகர்: இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மற்றும் மாடல் அழகியான ஹசல் கீச்க்கு இன்று திருமணம் நடைபெற உள்ளது, இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற சங்கீத் விழாவில் விராட் கோலி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர். 

மொகாலியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியை நான்காவது நாளிலேயே வென்றது இந்தியா. இந்நிலையில் விராட் கோலி தனது படையுடன் சண்டிகருக்கு சென்றார். அங்குள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் யுவராஜ்சிங் மற்றும் அவரது காதலி ஹசல் கீச் இருவருக்கும் நேற்று சங்கீத் விழா நடைபெற்றது. அதில் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.

முரளி விஜய், பார்த்திவ் பட்டேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், நெக்ரா, முகமது கைப், கபில்தேவ் போன்ற பிரபலங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். போட்டோக்களுக்கு விதவிதமாக போஸ் கொடுத்தனர். 

நேற்று நடந்த சங்கீத் விழாவில் விராட் கோலி தனது நண்பர்களுடன் பலத்த உற்சாகத்துடன் நடனம் ஆடினார். 

 

யுவராஜ்சிங்- ஹாசல் கீச் திருமணம் பஞ்சாப் மாநிலம் குர்த்வாராவில் இன்று நடக்கிறது. இந்த திருமணத்தில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்களும் திருமணத்தில் கலந்து கொள்கிறார்கள்.

Trending News