ஜிம்பாப்வே அதிரடி வெற்றி - சூடுபிடிக்க காத்திருக்கும் சூப்பர் 12 சுற்று!

டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் சுற்றுப்போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 21, 2022, 05:17 PM IST
  • குரூப் - ஏ பிரிவில் இலங்கை, நெதர்லாந்து அணிகள் தகுதிபெற்றன.
  • குரூப் - பி பிரிவில் ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் தகுதிபெற்றன.
  • சூப்பர் 12 சுற்று நாளை முதல் தொடங்குகிறது.
ஜிம்பாப்வே அதிரடி வெற்றி - சூடுபிடிக்க காத்திருக்கும் சூப்பர் 12 சுற்று! title=

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த அக். 16ஆம் தேதி தொடங்கியது. இந்த சுற்றில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் 'குரூப் - ஏ' பிரிவிலும், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, மேற்கு இந்திய தீவுகள், ஜிம்பாப்வே அணிகள் 'குரூப் - பி' பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.  

'குரூப் - ஏ' பிரிவில் இருந்து இலங்கை, நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், 'குரூப் - பி' பிரிவு அணிகளுக்கான கடைசி போட்டி இன்று நடைபெற்றது. அதன்படி, காலையில் நடைபெற்ற மேற்கு இந்திய தீவுகள் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், அயர்லாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று அடுத்து சுற்றுக்கு அசத்தலாக முன்னேறியது. 

கிரிக்கெட் வரலாற்றில், மேற்கு இந்திய தீவுகள் அணி முதன்முறையாக உலகக்கோப்பை தொடரின் பிரதான சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

மேலும் படிக்க | T20 World Cup: வெஸ்ட் இண்டீஸை ஊதி தள்ளிய அயர்லாந்து; உலக கோப்பையில் இருந்து அவுட்

இதையடுத்து, நடைபெற்ற ஸ்காட்லாந்து - ஜிம்பாப்வே போட்டியும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி, 133 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், ஜிம்பாப்வே அணியின் கேப்டன் எர்வின் மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோரின் அதிரடியால் ஜிம்பாப்வே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

இதன்மூலம், ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகள் 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளை பெற்றது. எனவே, ரன்ரேட் அடிப்படையில், ஜிம்பாப்வே அணி 'குரூப்-பி' பிரிவின் முதலிடத்தையும், அயர்லாந்து அணி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. 

இதனால், சூப்பர் 12 சுற்றின் முதல் பிரிவில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளுடன், 'குரூப்-ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த இலங்கை அணியும், 'குரூப்-பி' பிரிவில் இரண்டாமிடத்தை பிடித்த அயர்லாந்து அணியும் இடம்பெற உள்ளன. 

அடுத்து, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகள் உள்ள இரண்டாம் பிரிவில், 'குரூப்-ஏ'-வில் இரண்டாமிடத்தை பிடித்த நெதர்லாந்து அணியும், 'குரூப்-பி' பிரிவில் முதலிடம் பிடித்த ஜிம்பாப்வே அணியும் இடம்பெற உள்ளன. 

மேலும் படிக்க | T20 world cup: ரிசர்வ் நாளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News