ஸ்ரீதேவியை நினைவு கூர்ந்த மகள் ஜான்வி! உருக்கமான புகைப்படம்!!

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தன் அன்னையுடன் சந்தோசமாக சிரித்துக்கொண்டிருக்கும் தன் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்! 

Last Updated : May 14, 2018, 02:11 PM IST
ஸ்ரீதேவியை நினைவு கூர்ந்த மகள் ஜான்வி! உருக்கமான புகைப்படம்!!

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) கடந்த பிப்ரவரி 24-ம் தேதி இரவு 11 மணியளவில் துபாயில் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் மரணமடைந்தார். 

இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. ஸ்ரீதேவி இறந்த சோகத்தில் இருந்து இன்னும் குடும்பத்தினர் மீளாத நிலையில், மகள் ஜான்வி தற்போது, தன் முதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

இதையடுத்து, நேற்று அன்னையர் தினம் என்பதால் ஜான்வி மிக உருக்கமாக ஸ்ரீதேவியுடன் சந்தோசமாக சிரித்துக்கொண்டிருக்கும் தன் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
தற்போது, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றது.

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

More Stories

Trending News