ஆளும் தமிழக அரசுக்கு 135 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் நிருபர்களுக்கு முதல்வர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
135 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் தமிழக அரசுக்கு மெஜாரிட்டியில் உள்ளது. சூழ்நிலை காரணமாக சில எம்.எல்.ஏ.,க்கள் நேற்று கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. நாங்கள் பதவி ஏற்ற நாள்முதல் எங்கள் மீது ஸ்டாலின் வீணான குற்றம் சாட்டி வருகிறார் என்றார்.
மேலும் நீட் விவகாரத்தில் தமிழக அரசு முழு விலக்கு கோரிவந்தது எனினும் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பினை பின்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதுஎன தெரிவித்தார்.