2ஜி விவகாரம்: டிசம்பர் 5 தேதி வெளியாகிறது

Last Updated : Nov 7, 2017, 10:34 AM IST
2ஜி விவகாரம்: டிசம்பர் 5 தேதி வெளியாகிறது title=

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி தீர்ப்பு தேதியை டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். 

கூட்டணி ஆட்சி காலத்தின் போது 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. திமுகவின் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை சிபிஐ விசாரணை நடத்தியது. 

அந்த வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்த வழக்கின் இறுதி வாதங்கள், விசாரணைகள் முடிந்த நிலையில் கடந்த ஜூலை 15-ம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் அந்த தேதி செப்டம்பர் 20-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. 

இதையடுத்து சில காரணங்களுக்காக அக்டோபர் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்தார். ஆனால் சில ஆவணங்களை தயார் செய்ய வேண்டி இருப்பதால் தீர்ப்பு தேதி நவம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இன்றாவது தீர்ப்பு தேதி வெளியாகுமா என்ற நிலையில் வரும் டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Trending News