2-வது நாள் தமிழக சட்டசபை கூட்டம் துவங்கியது

தமிழக சட்டசபையின் 2-வது நாள் கூட்டம் இன்று நடந்தது. 

Last Updated : Jan 24, 2017, 11:05 AM IST
2-வது நாள் தமிழக சட்டசபை கூட்டம் துவங்கியது title=

சென்னை: தமிழக சட்டசபையின் 2-வது நாள் கூட்டம் இன்று நடந்தது. 

இந்த கூட்டத்தில் முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, முன்னாள் தமிழக கவனர்னர் பர்னாலா, சோ.ராமசாமி, கோ.சி. மணி, பாலமுரணி கிருஷ்ணா ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இதனையடுத்து கடந்த டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமான ஜெயலலிதா மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கான தீர்மானத்தை முதல்வர் பன்னீ்ர்செல்வம் முன்மொழிந்தார். டிசம்பர் 5 ம் தேதி தமிழகத்தின் இருண்ட நாள். என்றார்.

தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதலிடத்திற்கு கொண்டுவர பாடுபட்டவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்- முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

தமது வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் புரட்சித்தலைவி அம்மா- முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

புரட்சித்தலைவி அம்மா பூவுலகத்தில் இருந்து மறைந்தாலும், இதயத்தில் இருந்து தமிழகத்தை வழிநடத்தி செல்கிறார்- முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

Trending News