மூன்று அடி உயர ஒலிம்பிக் வாலிபரை கரம்பிடித்த இந்தோனேஷிய பெண்!

ஒலிம்பிக் போட்டிகளில் பதங்கங்களை வென்ற கேரள இளைஞர் இந்தோனேஷிய பெண்ணை திருமணம் செய்துள்ளார்.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jul 9, 2022, 04:10 PM IST
  • ஆகாஷ் மாதவனுக்கும் முகநூல் வாயிலாக இந்தோனேசிய பெண் - தேவி சித்தி செந்தரி (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
  • இரு வீட்டாரின் சம்மதத்துடன் நேற்று ஆகாஷ் மாதவனும் தேவியும் பகவதி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
மூன்று அடி உயர ஒலிம்பிக் வாலிபரை கரம்பிடித்த இந்தோனேஷிய பெண்! title=

கேரளா மாநிலம் மலப்புறம், மெலட்டூரைச் சேர்ந்த சேதுமாதவன் - கீதா தம்பதியின் மகன் ஆகாஷ் எஸ் மாதவன் (32). மூன்று அடி உயரம் கொண்ட இவர் 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற உலக குள்ளர்களுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆகாஷ் ஷாட் புட் போட்டியில் வெள்ளி மற்றும் வட்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்றார். 

மேலும் 2017 ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற உலக குள்ள விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் வெண்கலம் வென்றார்.

ஆகாஷ் மாதவன் ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இதனிடையே ஆகாஷ் மாதவனுக்கும் முகநூல் வாயிலாக இந்தோனேசிய பெண் - தேவி சித்தி செந்தரி (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் பற்றிய முக்கிய அப்டேட், ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு 

இந்தோனேஷியாவில் உள்ள கட்டிட கம்பெனியில் கணக்கராக தேவி  சித் சௌந்தர்யா பணிபுரிந்து வருகிறார்.

காலப்போக்கில் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. இவர்களின் தொலைதூர காதல் ஐந்து வருடங்கள் நீடித்துள்ளது. அதன் பின்னர் திருமணம் செய்துகொள்ள விரும்பிய இருவரும் தங்களின் பெற்றோரிடம் சம்மதம் வாங்கினர். 

பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நேற்று ஆகாஷ் மாதவனும் தேவியும் மலப்புறம் திருமந்தம் கீழாற்றூர் குன்று பகவதி கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம், எச்பிஏ விகிதங்களை குறைத்தது அரசு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News