4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு!!
தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளுக்கான தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்குகிறது. அந்தத் தொகுதிகளுக்கு உள்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். பொது வேட்பாளர் என்றால் ரூ.10 ஆயிரமும் ஆதிதிராவிடர் வேட்பாளர் என்றால் ரூ.5 ஆயிரமும் கட்டி மனு அளிக்க வேண்டும்.
வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஏப்ரல் 29-ஆம் தேதி ஆகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற மே 2-ஆம் தேதி கடைசி நாளாகும். மே 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
Tamil Nadu: TTV Dhinakaran-led Amma Makkal Munnetra Kazhagam has announced Mahendran as its candidate for Thiruparankundram assembly constituency in Madurai and Shahul Hameed from Aravakurichi assembly constituency in Karur. By-polls in the state will be held on May 19
— ANI (@ANI) April 22, 2019
இந்நிலையில், தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது, 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேட்பாளர்கள் விவரம்:-
அரவக்குறிச்சி - சாகுல் ஹமீது
சூலூர் - சுகுமார்
ஒட்டப்பிடாரம் - சுந்தர்ராஜன்
திருப்பரங்குன்றம் - மகேந்திரன்