புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும்: வானிலை மையம்!!

தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

Last Updated : Nov 27, 2020, 01:47 PM IST
    1. வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.
    2. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும்; டிச. 1 முதல் 3 வரை மழை பெய்ய வாய்ப்பு.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும்: வானிலை மையம்!!

தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை ஆய்வு (Chenai IMD) மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது (Rain) என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ALSO READ | 29 ஆம் தேதி மீண்டும் தமிழகத்தை தாக்க உள்ள மற்றொரு புயல்: எச்சரிக்கும் IMD

இது குறித்து வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில்., தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். 

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர்1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி கரையை கடந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

More Stories

Trending News