நடவடிக்கை எடுக்கப்படும்: நிர்மலா சீதாராமன் உறுதி

Last Updated : Mar 12, 2017, 03:19 PM IST
நடவடிக்கை எடுக்கப்படும்: நிர்மலா சீதாராமன் உறுதி title=

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை அரசின் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர்களிடம் மத்திய அமைச்சர் நிர்மலா போராட்டத்தில் கூறியுள்ளார். 

மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை அரசின் விசாரணை முடிந்த பின்னர் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

உயிரிழந்த மீனவரின் உடலை பெற்று நல்லடக்கம் செய்யுமாறு மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்தார். அதற்கு அவர்கள் மீனவ அமைப்புகளுடன் பேசி முடிவெடுப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மீனவர்களின் நியாயமான கோரிக்கையை பிரதமரிடம் நான் தெரிவிப்பேன் என்று அவர் கூறியுள்ளார். தமிழக மீனவர்களின் 136 படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். 

மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார். இருநாட்டு ஒப்பந்தத்துக்கு எதிராக இலங்கை துப்பாக்கியால் சுட்டது ஏன் என்று கேட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே மீனவரை கொன்றவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர போராட்டக்காரர்கள் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். 

Trending News