அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள்!

Last Updated : Aug 28, 2017, 01:04 PM IST
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள்! title=

இந்த ஆலோசனை கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

* சசிகலா, டிடிவி தினகரன் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது.

* அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவை விரைவில் கூட்ட முடிவு.

* சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவெடுத்து தீர்மானம்.

* நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி.யை அதிமுக.,வே எடுத்து நடத்த வேண்டும். 

 

 

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

 

 

அதிமுக நிர்வாகிகள் கூட்டம்  அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது. 

இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 

 

 

ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வருகை தந்துள்ளார்.

 

 

இரண்டாக பிறிந்து இருந்த அதிமுக அணிகள் ஒன்றாக இணைந்த பிறகு கட்சியில் பல்வேறு புதிய சர்சைகள் கிளம்பியது.

இதையடுத்து, அதிமுக-வை வழிநடத்த 15 பேர் கொண்ட குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

தற்காலிகமாக கட்சியை வழிநடத்தவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான இந்த குழு அமைக்கப்பட்டது. எனவே, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை விரைவில் கூட்டி, கட்சியின் பொதுச் செயலாளரான சசிகலாவை நீக்கிவிட்டு, புதிய பொதுச் செயலாளரை முடிவு செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் டிடிவி தினகரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி எழுப்பி உள்ளார்கள். தினகரன் அணியில் மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் இணைவார்கள் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடை பெறுகிறது. 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் என சுமார் 200 பேர் கலந்துகொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி விவாதிக்கப்படுகிறது. மேலும் பொதுக்குழு கூட்டத்தை கூட்டும் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறது. கட்சியை வழிநடத்த அமைக்கப்பட்டுள்ள 15 பேர் ஒருங்கிணைப்பு குழுவுக்கு ஒப்புதல் பெறப்படுகிறது. 

இந்நிலையில் அதிமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுவதையொட்டி, கூட்டத்தில் பங்கேற்க டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவகளுக்கு இந்த கூட்டத்தில் எவ்வித அழைப்பும் வர வில்லை என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்,எல்,ஏ.,க்கள் கூறியுள்ளனர்.

Trending News