சாதி பெயரை கூறி அடித்து துன்புறுத்தல் - ஏக்கத்தோடு வந்த நின்ற பள்ளி மாணவர்கள்..!

பொள்ளாச்சி அடுத்த நல்லூத்துக்குளியில் சிறுவர் சிறுமிகளை சாதி பெயரை கூறி அடித்து துன்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : May 9, 2022, 05:00 PM IST
  • மாணவ மாணவியருக்கு தொல்லை
  • தீண்டாமை கொடுமையால் கடும் அவதி
  • கண்ணீரோடு கையேந்தும் பெற்றோர்கள்
சாதி பெயரை கூறி அடித்து துன்புறுத்தல் - ஏக்கத்தோடு வந்த நின்ற பள்ளி மாணவர்கள்..! title=

பொள்ளாச்சி அடுத்த நல்லூத்துகுளி கிராமம்.... இக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களே திரளாக வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள குழந்தைகள் அருகிலுள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில் பயின்று வருகின்றனர். தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து விவசாய தோட்டங்களின் வழியே சிறுவர் சிறுமிகள் பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மற்றொரு தரப்பினர் பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமிகளை துன்புறுத்துவது, அடிப்பது, சாதி பெயரை கூறி திட்டுவது என எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற சிறுவன் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார். அதில் சுயநினைவை இழைந்து சிறுவன் மயங்கி விழுந்திருக்கிறார். இதுகுறித்து தெரியவரச் சிறுவனை மீட்டு சிகிச்சை அளித்தனர்.

சாதி பெயரை கூறி அடித்து துன்புறுத்திய, pollachi, பொள்ளாச்சி,நல்லூத்துக்குளி

சிறுவனை தாக்கியவர்களிடம் அவனது குடும்பத்தினர் எதற்காக அடித்தீர்கள் என்று கேட்டபோது, மிரட்டும் தோணியில் பேசியுள்ளனர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் முறையிட்டும் எந்த பலனுமில்லை. பள்ளிக்கு செல்ல மாணவ, மாணவியர்கள் அச்சம் அடைந்ததால் பெற்றோர்கள் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகிப்போனார்கள். இதற்கிடையே, பொறுமை இழந்த பெற்றோர் மாணவ மாணவியரை கையோடு கூட்டிக்கொண்டு பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். சாதி பெயரை கூறி அடித்து துன்புறுத்தும் கொடூரக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகாரளித்தனர்.

சாதி பெயரை கூறி அடித்து துன்புறுத்திய, pollachi, பொள்ளாச்சி,நல்லூத்துக்குளி

மேலும் படிக்க | தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறார். நேரில் சென்று ஆய்வு நடத்த ஆட்சியரும், அரசு அதிகாரிகளும் முடிவெடுத்துள்ளனர். அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரம், விலைவாசி, ரூபாய் நோட்டு என காலம் மாற மாற ஆயிரம் மாற்றங்கள்... ஆனால் இன்னும் சாதி மீதான அடக்குமுறைகளுக்கு மட்டும் மாறியபாடில்லை. இன்னும் எத்தனை தலைமுறையினரை கண்ணீர் சிந்தவைக்கும் இந்த தீண்டாமை கொடுமை.

மேலும் படிக்க | ஜிப்மரில் இந்தி கட்டாயம்....திமுக, மதிமுக ஆர்ப்பாட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News