கருணாநிதிக்கு "பாரத ரத்னா" விருது : வைரமுத்துவின் வாழ்த்துக் கவிதை.!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு உயரிய விருதான "பாரத ரத்னா" விருது வழங்க வேண்டும் என, கவிஞர் வைரமுத்து வலியுறுத்தியுள்ளார். 

Written by - Dayana Rosilin | Last Updated : Jun 3, 2022, 01:29 PM IST
  • மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள்
  • கருணாநிதி "பாரத ரத்னா" விருது வழங்க வேண்டும்
  • கவிதையில் வாழ்த்து தெரிவித்த வைரமுத்து
கருணாநிதிக்கு "பாரத ரத்னா" விருது : வைரமுத்துவின் வாழ்த்துக் கவிதை.! title=

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 99வது பிறந்த நாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து தனது பாணியில் கவிதை மூலம் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அனிருத்தை அழ வைத்த நடிகர் கமல்ஹாசன்...காரணம் என்ன?

Karunanithi Birthday

அஞ்சுகத்தாயின் ஒரே மகன் ஆகையால் நீ ஒன்றானவன்" என்று தொடங்கும் அந்த கவிதை உன்னை எண்ணங்களாலும் சிந்திக்கலாம் எண்களாலும் சிந்திக்கலாம்" என்று முடியும் வகையில் எழுதியுள்ளார். மேலும், கருணாநிதிக்கு உயரிய விருதான "பாரத ரத்னா" விருது வழங்க வேண்டும் எனவும் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார். 

இதனை தொடர்ந்து தனது ட்விட்டரில் வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கலைஞர் நினைவிடம், கலைஞர் சிலை, கோபாலபுரம் சி.ஐ.டி காலனி உள்ளிட்ட இடங்களில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தியதாகவும், அனைத்து இடங்களிலும் பழைய நினைவுகளில் தன்னை பரவசத்தில் ஆழ்த்தியது எனவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேரும் பிரபல நாயகி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News