பவானி அணை விவகாரம்: கேரளாவுக்கு எதிராக வழக்கு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசைக் கண்டித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் என்றும் தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.

Last Updated : Jan 31, 2017, 03:09 PM IST
பவானி அணை விவகாரம்: கேரளாவுக்கு எதிராக வழக்கு: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு title=

சென்னை: பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசைக் கண்டித்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் என்றும் தமிழக முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.

பவானி ஆற்றின் குறுக்கே கேளர அரசு ஆறு தடுப்பணைகளைக் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது. தமிழக அரசின் அனுமதி பெறாமல் அத்துமீறி கட்டப்படும் இந்த அணைகள் மூலம் 15,000 ஏக்கர் பரப்பில் புதிய பாசனத் திட்டதை உருவாக்க அம்மாநில அரசு முயல்கிறது.

பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அணைகட்டுவதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் - முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் விவகாரம்  நாளை அல்லது மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு- முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.

இது தொடர்பாக, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசை எதிர்த்து இன்னும் 2 நாட்களில் வழக்கு தொடரப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்திருக்கிறார்.

Trending News