உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட்ட தொடர் நஷ்டம் காரணமாக கடந்த 6 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி 20 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. மாணவர்களும் எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்று தேனியில் போலியோ சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர், பஸ் கட்டண உயர்வை குறைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும் என்றார்.
உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இன்று குறைக்கப்பட்ட பஸ் கட்டணத்தின்படி,
> சாதாரண பேருந்துகளில் கட்டணம் 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும்,
> விரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும்,
> சொகுசு பஸ்களில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும்,
> அதிநவீன பஸ்களில் 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 லிருந்து ரூ. 4 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.