இன்று தலைமை செயலகத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம், இடைப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
காவிரி விவகாரம் தொடர்பாக இந்த ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பொதுப்பணித்துறை அமைச்சரும், ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் வந்தனர். சுமார் 15 நிமிடம் ஆலோசனை நடைபெற்றது.
பின்னர் மு.க ஸ்டாலின் அவர் கூறியதாவது:- நேற்று பலவேறு விவசாய அமைப்புகளுடன் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட தீர்மான நகல்களை அமைச்சர்கள் ஓ.பன்னீர்ச் செல்வம், இடைப்பாடி பழனிசாமியை சந்தித்து அளித்து உள்ளோம். தீர்மானத்தின் படி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்றும், அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து வலியுறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டு உள்ளோம். தங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக இரண்டு அமைச்சர்களும் உறுதி மொழி அளித்துள்ளனர் எனக்கூறினார்.