தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ப.தனபால் தேர்வு:-

Last Updated : Jun 3, 2016, 12:18 PM IST
தமிழக சட்டப்பேரவைத் தலைவராக ப.தனபால் தேர்வு:- title=

தமிழகத்தில் கடந்த மாதம் 15-வது சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. அதிக இடங்களை கைப்பற்றிய அ.தி.மு.க வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தலைமையில் புதிய அமைச்சரவை கடந்த மாதம் 23-ம் தேதி பதவியேற்றது. அதனையடுத்து 25-ம் தேதி சட்டப்பேரவை கூடியது. அப்போது சட்டபேரவையின் தற்காலிக தலைவரான செம்மலை முன்னிலையில் முதல்வர் உட்பட அனைவரும் பதவியேற்றனர்.

அ.தி.மு.க சார்பில் சட்டபேரவைத் தலைவர் வேட்பாளராக பி.தனபால் மற்றும் துணைத் தலைவர் வேட்பாளராக பொள்ளாச்சி ஜெயராமன் அறிவிக்கப்பட்டனர். இன்று இருவரும் பதவியேற்றுக் கொண்டனர்.

சபாநாயகருக்கு வாழ்து கூறிய முதல்வர் ஜெயலலிதா பேசியது:- "நடுநிலை மாறாத தராசு முள் போல் சபாநாயகர் தொடர்ந்து செயல்படுவார் என நம்புகிறேன். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் நாணயத்தின் இருபக்கங்களைப் போல் செயல்பட வேண்டும். ஒரு பக்கம் தேய்ந்தால்கூட நாணயம் செல்லாகாசு ஆகிவிடும். அதேபோல் சபாநாயகரின் மரபை காக்கும்படி எதிர்க்கட்சி செயல்படும் என நம்புகிறேன். எதிர்க்கட்சிகள் மக்களுக்கு பயன்படக் கூடிய ஆக்கபூர்வ கருத்துகளை தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்றார். எதிர்க்கட்சிதான் எதிரிகட்சி அல்ல எனக்கூறினார்

சபாநாயகருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பேசியது:- 89 உறுப்பினர்களைக் கொண்ட திமுக எதிர்க்கட்சியாக செயல்படுமே தவிர எதிரிக்கட்சியாக செயல்படாது என்றார்.

Trending News