சென்னையில் டொனால்ட் டிரம்ப் ஸ்பெஷல் தோசை

அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் டிரம்ப் தோசை என புதியதாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

Last Updated : Nov 19, 2016, 01:37 PM IST
சென்னையில் டொனால்ட் டிரம்ப் ஸ்பெஷல் தோசை title=

சென்னை: அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் டிரம்ப் தோசை என புதியதாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

சி.பி. முகுந்த் தனது ஹோட்டலில் புதிய வகை வெள்ளை தோசையை அறிமுகப்படுத்தி, அதற்கு 'டிரம்ப் தோசை' என்று பெயரிட்டுள்ளார். இதனை ஹோட்டலுக்கு வெளியே பேனர் வைத்து விளம்பரமும் செய்துள்ளார். வாழை இலையில் தோசையுடன், சட்னிக்கள், சாம்பார் மற்றும் ஒரு கப் வெண்ணையுடன் பரிமாறப்படுகிறது. 

டிரம்ப்பின் வெற்றிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த புதுய வகை தோசையை அறிமுகப்படுத்தியுள்ளதாக சி.பி. முகுந்த் கூறினார். மேலும் அதிபர் தேர்தலின் போது பிரசாரம் மேற்கொண்ட டிரம்ப்பின் பேச்சும், அவரது முக பாவங்களும் தன்னை மிகவும் ஈர்த்ததாக அவர் கூறினார். 

புதிய டிரம்ப் தோசை குறித்து ஹோட்டல் மேலாளர் விபின் புருஷோத்தமன் கூறுகையில் ஒரு நாளைக்கு சராசரியாக 130 தோசைகள் வார்க்கப்பட்டு விற்பனையாகிறது. மேலும் ஒரு ஹோட்டல் உரிமையாளராக ஒரு புதுவகை உணவை அறிமுகப்படுத்தி, அதற்கு தனக்குப் பிடித்த நபரான டிரம்ப் பெயரை வைப்பது மட்டுமே முடியும் என்றார்.

Trending News