சுத்து போட்ட சுறா... நடுக்கடலில் சண்டை போட்ட மீனவர் - திக் திக் வைரல் வீடியோ

Shark Viral Video: நடுக்கடலில் உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், தனது படகையே சுற்றி சுற்றி வந்த சுறாவை ஒரு நபர் தற்காப்புக்காக தாக்குகிறார். அதன் வீடியோ தற்போது வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 28, 2024, 04:02 PM IST
  • அந்த வீடியோ பார்க்கும்போதே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
  • சுறா மீண்டும் மீண்டும் தாக்கவந்ததால் அந்த நபர் தாக்கினார்.
  • நெட்டிசன்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
சுத்து போட்ட சுறா... நடுக்கடலில் சண்டை போட்ட மீனவர் - திக் திக் வைரல் வீடியோ title=

Shark Viral Video: கடல் எப்போதுமே பிரமிப்பை தரும் ஒரு விஷயம் எனலாம். உங்களால் சமதளத்தில் நின்றுகொண்டு பரந்துவிரிந்து கிடக்கும் அந்த கடலை பார்த்தாலே இந்த உலகம் எவ்வளவு பெரியது என்ற எண்ணம் உங்கள் மூளையை தாக்கும். நிலத்தை போலவே கடலும் தனி உலகம் எனலாம். நிலத்தை வாழும் உயிரினங்களை போன்று கடலிலும் கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அதேபோல், மீனவர்கள் வாழ்விலும் கடல் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. 

குறிப்பாக கடல் சார்ந்து வாழும் மனிதர்களை மீனவர்கள் என்ற அழைப்பதே தவறு எனலாம். அவர்களை நாம் கடலோடிகள் என்றே அழைக்க வேண்டும். நிலப்பகுதிகள் முழுவதும் சுற்றித் திரிபவர்களை நாடோடிகள் என கூறுவதை போன்று கடலையே உலகமாக வைத்து அங்கு சுற்றித்திரியும் மக்களை நாம் கடலோடிகள் என அழைப்பதே சரியாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் மீன்களை மட்டும் அங்கு பிடிக்கவில்லை. தங்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் அந்த கடலோடு பிணைத்துகொள்கிறார்கள் எனலாம்.

சுறா மீனின் வைரல் வீடியோ

அதேபோன்று அவர்கள் கடலுக்கே ராஜா என்றும் நினைக்கக் கூடாது. எப்படி மனிதனின் பேராசையால் காடுகள் அழிக்கப்படுகிறதோ, அதேதான்... நமது பேராசையால் கடல் வளங்கள் சுரண்டப்படுவதையோ, அழிக்கப்படுவதையோ அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால் எண்ணற்ற உயிரினங்கள் கடலையே நம்பி வாழ்ந்து வரும் சூழலில், நமது ஆறாம் அறிவின் விளைவால் வரும் ஆபத்துகளால் அவை பாதிக்கப்படுவது ஏற்கத்தக்கது அல்ல. இப்படி கடலும் நமது சுற்றுச்சூழலில் முக்கிய இடத்தை பிடிக்கிறது.

மேலும் படிக்க | நீர்நாயை பார்த்ததும் குஷியான வாகன ஓட்டிகள்! நீங்களும் சிரிப்பீங்க...வைரல் வீடியோ..!

அந்த வகையில், தற்போது கடலில் நடந்த ஒரு பயங்கர சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடலோடி ஒருவர் சிறிய படகில் கடலில் சென்றுகொண்டிருக்கும்போது ஒரு சுறா மீனுடன் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த சுறா மீன் அவரின் படகையே வட்டமிட்டு வந்த நிலையில் அதனை தனது துடுப்பை வைத்து அந்த நபர் தாக்கும் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ பல விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

நெட்டிசன்கள் கருத்து

ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகள் பகுதிகளில் சிறிய படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த நபர் சுறா மீனிடம் சிக்கி உள்ளார். தனது தற்காப்புக்காக அந்த துடுப்பை பயன்படுத்தி சுறாவை தனது பக்கம் நெருங்கவிடாமல் பார்த்துக்கொண்டார். சுமார் 53 விநாடிகள் நீளும் அந்த வீடியோவில் அந்த நபர் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள தன்னால் முடிந்த முயற்சியை மேற்கொண்டார் எனலாம். அந்த வீடியோவில் தென்படும் சுறா Hammerhead Shark என்றழைக்கப்படுகிறது.

பலரும் இந்த Hammerhead சுறா மனிதர்களை உண்ணாது எனவும் தனக்கு ஆபத்து வருகிறதோ என்ற அச்சத்தில் தற்காப்புக்காக மனிதர்களை தாக்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். பலரும் அந்த படகோட்டி மீதுதான் தவறு என்றும் சுறாக்கள் சுற்றும் பகுதிகளில் படகோட்ட சென்றதே பெரிய தவறும் எனவும் கூறி வருகின்றனர். மனிதர்கள் பிற உயிரினங்களின் வாழ்விடங்களுக்கு சென்றால் அவற்றை குறைந்தபட்சம் தாக்காமலாவது வரலாம் என ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். 

மேலும் படிக்க | புயலின் கோரத் தாண்டவம்... அகோரமான அழகிய ஊரின் பரிதாபம்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News