ரூ.127 கோடி மதிப்பிலான 471 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர்

ரூ.127 கோடி மதிப்பிலான 471 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 10, 2018, 02:26 PM IST
ரூ.127 கோடி மதிப்பிலான 471 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் title=

சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்து 471 புதிய பேருந்துகளின் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மொத்த மதிப்பு ரூ.127 கோடி ஆகும்.

அதில் 60 பேருந்துகள் "ஏசி வசதி" மற்றும் "படுக்கை வசதி" கொண்ட பேருந்துகள் ஆகும். விழுப்புரம் கோட்டத்திற்கு 103 பேருந்துகளும், சேலம் கோட்டத்திற்கு 77 பேருந்துகளும், கோயம்பத்தூர் கோட்டத்திற்கு 40 பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்திற்கு 111 பேருந்துகளும், மதுரை கோட்டத்திற்கு 30 பேருந்துகளும் செயல்படும். இந்த பேருந்து சேவையானது இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் ஜெயக்குமார்,தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ப்பட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Trending News