முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி (Edappadi K Palaniswami )மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (O.Panneerselvam) என்ற இரு முக்கிய தலைவர்களிடையே கடுமையான பிரச்சனை ஏற்பட்டுள்ள நேரத்தில், அதன் கூட்டணி கட்சிகள், 2021 சட்டமன்றத் தேர்தலை ஒன்றுப்பட்ட அதிகமுக தலைமையில் தேர்ட்ய்ஹலை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளன
முதல்வர் வேட்பாளர் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே நிலவும் பிரச்சனை, அக்டோபர் 7 ஆம் தேதி ஆளும் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படும் போது முடிவடையும் என்று பாஜக மாநில செயலாளர் கே.சீனிவாசன் கூறினார்.
சட்டமன்றத் தேர்தல் பணிகள் மாநிலத்தில் சூடு பிடித்து வருவதால், அதிமுகவில் உயர் மட்ட நிலையில் மோதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மரணம் மற்றும் வி.கே சசிகலா சிறைக்கு சென்ற பின்னர், எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கீழ் கட்சி இரண்டாக பிரிந்தது.
பன்னீர்செல்வம் கட்சிக்கும், பழனிசாமி ஆட்சிக்கும் தலைமை தாங்குவார் என்ற ஒப்பந்தம் ஏற்ப்பட்டதைத் தொடர்ந்து இரு பிரிவுகளும் மீண்டும் ஒன்றிணைந்தன. இப்போது, அரசின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கட்சியில் தலைமை பிரச்சினை மீண்டும் முளைத்துள்ளது. கட்சியின் செயற்குழு கூட்டத்தில், முதலவர் பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையிலான பிரச்சனை தீவிரமடைந்தது. ‘தர்மயுதத்தம் பார்ட் -2 என்ற அச்சம் தொண்டர்களிடையே எழுந்தது.
ALSO READ | தர்மயுத்தம் பார்ட்-2 தொடங்குகிறதா... அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் சிக்கல்...?
இருப்பினும், ஆளும் கட்சியின் கூட்டணியில் கட்சிகள் யாரும் AIADMK ஒரு சிறிய விரிசல் ஏற்படுவதைக் கூட விரும்பவில்லை.
பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவும், பழனிசாமியை சசிகலாவும் தேர்வு செய்தனர், இருவரும் எனக்கு நெருக்கமானவர்கள். கட்சியின் முன்னேற்றத்திற்காக இருவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என கூட்டணி கட்சியான கொங்கு இளைஞர் பேரவை கட்சித் தலைவர் தனியரசு கூறியுள்ளார்.
இருப்பினும், எதிர்வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகள் அதிமுகவிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது என அரசியல் ஆய்வாளர்கள் என்று கருதுகின்றனர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR