பலே திருடர்கள் - சிசிடிவியில் பதிவான செருப்பை வைத்து துப்பு துலக்கி கெத்து காட்டிய போலீசார்

கோவை மாவட்டம், சூலூர் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்தவரை செருப்பை வைத்து கூண்டோடு பிடித்த காவல்துறையினர் மாஸ் காட்டியிருக்கிறார்கள்.

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 4, 2022, 04:59 PM IST
  • காவல்துறையினருக்குத் தண்ணீர் காட்டிய பலே திருடர்கள்
  • கடைசியில் காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்
  • செருப்பை வைத்து செக் வைத்த அதிகாரிகள்
பலே திருடர்கள் - சிசிடிவியில் பதிவான செருப்பை வைத்து துப்பு துலக்கி கெத்து காட்டிய போலீசார் title=

கோவை மாவட்டம், சூலூர் அருகே தொடர் வழிப்பறி திருட்டு மற்றும் வீடு புகுந்து திருடும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர்களை காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் முத்துகவுண்டன் புதூர் பகுதியில் நடந்த செயின் பறிப்பு சம்பவம்  தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது தேனீர் கடை ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 நபர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து போலீசார் விசாரிக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கு பயந்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு தப்பியோடிய நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் .

Theft,robbery,robbers,cbe,police,செருப்பை வைத்து

இதேபோல், ஒரு கும்பல் பல்லடம் பகுதியில் உள்ள செல்போன் கடையில் திருடும் சிசிடிவி காட்சி ஒன்று போலீசாருக்கு கிடைத்தது. அதில் பதிவாகியிருந்த நபரின் கால் செருப்பை ஆய்வு செய்து விசாரித்தபோது, அந்த செருப்பு கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மருதாச்சலம் என்பவருடையது என தெரியவந்தது.

கால் செருப்பை வைத்து துப்பு துலக்கிய போலீசார், கலங்கல் பகுதியில் பதுங்கியிருந்த மருதாசலத்தைப் பிடித்து அவரிடம் நடத்திய விசாரணை மேற்கொண்டனர். அதில், மருதாசலத்துடன் சேர்ந்து நடராஜன், சதீஷ் உள்ளிட்ட மூவரும் வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளை அடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 

Theft,robbery,robbers,cbe,police,செருப்பை வைத்து

மேலும் படிக்க | சொத்துக்காக அக்கா வெறியாட்டம் ; மனநலம் பாதிக்கப்பட்ட தம்பி கொலை!

இதில் நடராஜன் தனது 14 வயதிலிருந்து திருடி தற்போது 51 வயதிலும் திருட்டு தொழில் செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும், இவர் மீது வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட 80 வழக்குகள்  மீது உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல பல்லடம் பகுதியில் செல்போன் கடையை நோட்டமிட்டுத் திருடிய கும்பலும் இவர்கள்தான் என்பதும் காவல்துறைக்குத் தெரியவந்தது. இதையடுத்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடமிருந்து 30 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க | மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் மனைவி கொலை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

 

Trending News