பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேஸி மோகன் மாரடைப்பால் மரணம்

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன்(66) மாரடைப்பால் காலமானார்!!

Last Updated : Jun 10, 2019, 02:47 PM IST
பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேஸி மோகன் மாரடைப்பால் மரணம் title=

பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன்(66) மாரடைப்பால் காலமானார்!!

கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற நாடக குழுவின் மூலம், பல்வேறு நவீன நாடகங்களை அரங்கேற்றம் செய்தவர் கிரேஸி மோகன், வயது 66.  சதி லீலாவதி, மைக்கேல் மதன காமராஜன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். அவற்றில் நடிக்கவும் செய்துள்ளார். மெட்டி ஒலி, உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.

’கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ என்னும் நாடகம் மூலம் பிரபலமானவர் கிரேஸி மோகன். தொடர்ந்து பல மேடை நாடகங்கள், டிவி நிகழ்ச்சிகள், தொடர்கள், சினிமா என இயங்கி வந்தவர் மோகன். தன்னுடைய சகோதரர் பாலாஜி உடன் இணைந்து இவர் இயற்றிய பல நாடகங்களுக்கு இன்றளவும் மக்கள் போட்டிப்போட்டு வரவேற்பு அளிப்பர்.

1970 ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை நிறைவு செய்தவர் 1979 ஆம் ஆண்டு முதல் தனது நண்பர்கள் உடன் இணைந்து ‘கிரேஸி’ என்னும் குழு மூலம் மேடை நாடகங்களை இயக்கி, நடிக்கவும் தொடங்கினார். நடிகர் கமல்ஹாசன் உடன் இணைந்து பல வெள்ளித்திரை படங்களுக்கும் கதை, வசனம் எழுத்தியுள்ளார் கிரேஸி மோகன்.

இவர், உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு திரைப்பட கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

Trending News