புதுடெல்லி: ஜாமீன் கோரி தாக்கல் செயப்பட்ட மனுவை திரும்ப பெற்ற முன்னால் நிதியமைச்சர் ப.சிதம்பரம். மேலும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிரான மனுவில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது நோட்டீஸ் டெல்லி உயர்நீத்திமன்ற.
ஐஎன்எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாகவும், அதற்கு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு தொடுத்து விசாரணை நடத்தி வந்தது. கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி அவரின் முன்ஜாமீன் மனு தள்ளுப்படி ஆனதால், அன்று இரவே டெல்லியில் உள்ள தனது வீட்டில் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரியால் கைது செய்யப்பட்டார்.
15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிற்பித்தார். இதனையடுத்து தற்போது ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள திஹார் சிறையில் உள்ளார்.
நேற்று ப. சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செயப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஜாமீன் தொடர்பாக கீழ் நீதிமன்றத்தை அணுக வேண்டும் எனக் கூறியது. இதனையடுத்து ஜாமீன் மனுவை திரும்ப பெற்றார்.
மேலும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ப. சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதில் அளிக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீத்திமன்றநோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.