தமிழகத்தின் இடைக்கால முதல்வர் அறிவிக்க ஆலோசனை!!

Last Updated : Dec 5, 2016, 01:41 PM IST
தமிழகத்தின் இடைக்கால முதல்வர் அறிவிக்க ஆலோசனை!!  title=

தீவிர மருத்துவ கண்காணிப்பில் முதல்வர் ஜெயலலிதா.

முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பில் தகவல் வந்த வண்ணம் இருந்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரி சேர்மன் பிரதாப் சி.ரெட்டி மூன்று முறை  ஜெயலலிதா குணம் அடைந்து வருவதாக கூறினார். கடந்த 73 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதய செயல்பாட்டிற்காக செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. நுரையீரல் மற்றும் இதயம் சீராக செயல்பட மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுக தொண்டர்கள் நேற்று மாலை முதல் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் ஜெயலலிதா நலம் பெற்று திரும்பி வரவேண்டும் என்ற நாடு முழுவதும் மக்கள் பிரார்த்தனைகள் செய்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் இடைக்கால முதல்வரை அறிவிக்க ஆளுநர் வித்யாசகர் ராவுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து இன்று ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் ஆகியோருடன் ஆளுநர் பேசி வருகிறார். இன்று பிற்பகல் அதிமுகவின் அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டம் கூட இருக்கிறது. இக்கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் புதிய இடைக்கால முதல்வர் அறிவிக்கப்படுவார் என எதிர் பார்க்கப்ப டுகிறது.

Trending News