கட்டைக் காலுடன் வாகன திருட்டில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி

சென்னையில் கட்டைக் காலுடன் இருந்த மாற்றுத் திறனாளி வாகனத் திருட்டில் ஈடுபட்டது சிசிடிவி கேமரா மூலம் அம்பலமாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 24, 2022, 09:28 PM IST
  • சென்னையில் வாகன திருட்டு
  • சிசிடிவியில் சிக்கிய மாற்றுத் திறனாளி
  • கைது செய்த ராயப்பேட்டை காவல்துறை
கட்டைக் காலுடன் வாகன திருட்டில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி  title=

ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் வாகன திருட்டு தொடர்பாக காவல்துறைக்கு புகார் சென்றது. இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், ஒரு வலது கால் இல்லாமல் கட்டைக்காலுடன்  இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் ஈடுப்பட்டதை கண்டுபிடித்தனர். அதேநபர் துலுக்கானும் தோட்டம், அனகாபுத்தூர், ஒரகடம், ஆகிய இடங்களிலும் வாகன திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து இராயப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் பசுபதி தலைமையில், உதவி ஆய்வாளர் ராஜேந்திரன்,  தலைமை காவலர் மாரி முன்னிலையிலும்  தனிப்படை  அமைத்து  இராயப்பட்டை  போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். அதில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் 2021 ஆம் ஆண்டு இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடைய நபர் மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.  

தேடுதலில் சிக்கிய மணிகண்டனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், தான் ஒரே இடம் திருடுவதில்லை என்பதை தெரிவித்த அவர், வெவ்வேறு இடங்களுக்கு சென்று திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார். அந்த இருசக்கர வாகனங்களை தரகர் மூலம் விற்பனை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மணிகண்டனிடம் இருந்து சுமார் 4 இருசக்கர வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க | சாலையோரம் வீசப்படும் பச்சிளம் குழந்தைகள் - உண்மையில் இதன் உளவியல் பிரச்சனைகள்தான் என்ன ?

மேலும் படிக்க | ’அடக்குமுறையை மீறி வளர்ந்தவன்’ கோவை அரசு விழாவில் முதலமைச்சர் கர்ஜணை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News