நெடுஞ்சாலைத்துறை முறைகேடு: தமிழக ஆளுநர், M.K. ஸ்டாலின் சந்திப்பு!

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்திக்கிறார்!!

Last Updated : Jul 23, 2018, 11:07 AM IST
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு: தமிழக ஆளுநர், M.K. ஸ்டாலின் சந்திப்பு! title=

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்திக்கிறார்!!

கடந்த வாரம் நெடுஞ்சாலைத் துறை அரசு ஒப்பந்ததாரர்களின் இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், 100 கிலோ தங்கமும், 200 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை முறைகேடுகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து மனு கொடுக்க உள்ளார். 

இதற்காக ஆளுநரிடம் திமுக தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. அவரும் இன்று காலை 11 மணிக்கு நேரம் ஒதுக்கியுள்ளார். ஆளுநரிடம் புகார் கொடுத்த பிறகு, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடங்க திமுக முடிவு செய்துள்ளது.
       
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் செய்யாத்துரையின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் 5 நாட்கள் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.170 கோடி ரொக்கப் பணம், 105 கிலோ தங்கக் கட்டிகள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரது உறவினர்களுக்கு சம்பந்தம் இருப்பதாகவும், சோதனையோடு இதை விட்டுவிடாமல், உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாரும் அதில் கூறப்பட்டுள்ளது.

 

Trending News