ரபேல் வாட்ச் விவகாரம்... "பயந்துட்டியா மல" - திமுகவின் போஸ்டர்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் குறித்த கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில் "பயந்துட்டியா... மல" என திமுக போஸ்டர் ஒட்டியுள்ளனர். 

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 23, 2022, 05:48 PM IST
  • ரபேல் வாட்ச் விவகாரம்தான் தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாபிக்
  • பலரும் அண்ணாமலையை விமர்சிக்கின்றனர்
  • திமுக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன
 ரபேல் வாட்ச் விவகாரம்... "பயந்துட்டியா மல" - திமுகவின் போஸ்டர் title=

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்டியுள்ள ரபேல் வாட்ச் விலை குறித்து தற்போது பரவலாக பேசப்பட்டுவருகிறது. பல்வேறு அரசியல்வாதிகளின் செய்தியாளர் சந்திப்பிலும்கூட இது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் பாஜகவின் எதிர்க்கட்சியினர் பலரும் ரபேல் வாட்ச் விவகாரம் குறித்து அவர்களது கருத்துக்களையும் மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதற்கான ரசீது கேட்டு பல்வேறு அரசியல்வாதிகளும், சமூக வலைதளவாசிகளும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அதற்கான ரசீது தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்து வருகிறார். மேலும் இந்த வாட்ச் வைத்து எம்பிக்களை பெற்று விட முடியும் என கோவையில் அவர் பேசியதும் தற்போது பேசுபொருளாகி உள்ளது. 

இந்நிலையில் கோவை மாவட்ட பெரிய கடைவீதி திமுக சார்பில் உக்கடம், லங்கா கார்னர் என மாநகர பகுதிகளில்  போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் வாட்ச் ஒன்றை பெரியதாக அச்சிட்டு "டிக்..டிக்..டிக் பயந்துட்டியா... மல" என அண்ணாமலையின் பெயரை கூறாமல் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த போஸ்டரின் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | கோவையில் இதுவரை 1.32 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி

மேலும் படிக்க | இந்த நாட்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை தகவல் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News