சென்னை: தமிழகத்தை பாலைவனமாக்கத் துணிந்த மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக அரசுகளைக் கண்டித்து ஜனவரி 28 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. அதுக்குறித்து அறிக்கையும் வெளியிடப்பட்டு உள்ளது.
அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்," இதுவரை எந்த மத்திய அரசும் இப்படி சர்வாதிகாரமாக, விளைநிலங்களை அழித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற முயன்றதில்லை. தமிழகத்தை பாலைவனமாக்கத் துணிந்த பாஜக மாறும் அடிமை அதிமுக அரசுகளைக் கண்டித்து, வரும் ஜனவரி 28 அன்று, 5 மாவட்டங்களில் திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளார். மேலும் தனது அறிக்கையும் அதில் இணைத்துள்ளார்.
இதுவரை எந்த மத்திய அரசும் இப்படி சர்வாதிகாரமாக, விளைநிலங்களை அழித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற முயன்றதில்லை.
தமிழகத்தை பாலைவனமாக்கத் துணிந்த பாஜக - அடிமை அதிமுக அரசுகளைக் கண்டித்து ஜன 28 அன்று, 5 மாவட்டங்களில் திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். #NohydrocarboninTN pic.twitter.com/iAgxFHp0V0
— M.K.Stalin (@mkstalin) January 22, 2020
முன்னதாக ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்ட தேவையில்லை என்றும், அதேநேரத்தில் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களிடமும் கருத்துக் கேட்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழக அரசியல் கட்சிகள் உட்பட சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவினை அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
அதன் பிறகு, ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த அறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.