மறைந்த தலைவர் கலைஞர் அவர்களின் சாதனையை பறைசாற்றும் வகையில் திமுக-வின் நிரந்தர தலைவராக கலைஞர் அவர்களின் பெயரை அறிவிப்பதே அவருக்கு செய்யும் மரியாதை என தயாநிதி அழகிரி தெரிவித்துள்ளார்!
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது...
"50 ஆண்டுகள் கடந்து ஒரு இயக்கத்தின் தலைவராக ஆளுமை செலுத்தி மறைந்த தலைவர் கலைஞர் அவர்களின் சாதனையை பறைசாற்றிடும் விதமாக அவர் வகித்த தலைவர் பதவியை அவருக்கான நிரந்தர தலைவர் பதவியாக கவுரவித்து கொண்டாடுவதே அவருக்கு அளிக்கின்ற சிறந்த மரியாதையாக அமைந்திடும்" என பதிவிட்டுள்ளார்.
50 ஆண்டுகள் கடந்து ஒரு இயக்கத்தின் தலைவராக ஆளுமை செலுத்தி மறைந்த தலைவர் கலைஞர் அவர்களின் சாதனையை பறைசாற்றிடும் விதமாக அவர் வகித்த தலைவர் பதவியை அவருக்கான நிரந்தர தலைவர் பதவியாக கவுரவித்து கொண்டாடுவதே அவருக்கு அளிக்கின்ற சிறந்த மரியாதையாக அமைந்திடும்
— Dhaya Alagiri (@dhayaalagiri) August 22, 2018
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கடந்த ஆக., 7-ஆம் நாள் உடல்நிலை குறைவால் காலமானதை அடுத்து, திமுக தலைவர் பொறுப்பிற்கான தேர்தல் வரும் ஆக., 28-ஆம் நாள் நடைபெறவுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்றைய தினம் காலை 9 மணி அளவில் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கலைஞர் கருணாநிதி அவர்களின் மூத்த மகன் வழி பேரன் தயாநிதி அழகிரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.