நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை சனிக்கிழமை இரவு ரோந்துப்பணியில் இருந்தபோது ஆடு திருடும் கும்பலை விரட்டிச்சென்று பிடித்த நிலையில் அவர்களால் கொலைசெய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில் மணிகண்டன் என்பவன் உட்பட 2 சிறுவர்கள் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று உயிரிழந்த சிறப்பு ஆய்வாளர் பூமிநாதனின் (bhoominathan) இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது கும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது.,
ALSO READ: திருச்சி உதவி ஆய்வாளர் பணியின்போது வெட்டிப்படுகொலை
தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு பூமிநாதன் வீரத்தோடும் விவேகத்தோடும் பணியாற்றியுள்ளார் - ஒரு சிறந்த காவல்துறை அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக சாதாரண ஆடு திருட்டு என்று அவர் விட்டுவைக்காமல் முறைப்படி விசாரணை மேற்கொண்டுள்ளார் - 3 பேரை 15 கிலோமீட்டர் துரத்தி சென்று பிடித்து உள்ளார், ஆயுதத்தை பறிமுதல் செய்து வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறுவர்களுடைய பெற்றோருக்கு செல்போனில் அழைத்து இருபத்தி மூன்று நிமிடங்கள் அறிவுரை கூறியுள்ளார், சட்டத்துறை அறிவுரைப்படியும் சட்ட விதிகள்படியும் முறையாக செய்துள்ளார். தீடிரென இந்த சிறுவர்கள் இப்படி ஒரு தாக்குதலை நடத்துவார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை - அவருடைய வீரமரணம் தமிழக காவல்துறை வீரமிக்க விவேகம் மிக்க காவல்துறை என்பதனை எடுத்துக் காட்டுகிறது.
சிறுவர்களைப் பொறுத்தவரை மிகவும் அன்போடு கவனத்தோடு நடந்துகொள்ளும் காவல்துறை என்பதையும் இதன் வாயிலாக நமக்கு தெரிகிறது - அவர் அதை நிரூபித்துக் காட்டி உள்ளார். தமிழக முதல்வர் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாகவும் அவருடைய மகனுக்கு அரசு வேலை வழங்குவதாகவும் கூறி உள்ளார் அவருக்கு காவல்துறை சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
சிறந்த கமெண்ட் பயிற்சி எடுத்துள்ள அவருடைய இழப்பு காவல்துறைக்கு பெரிய இழப்பாக இருக்கிறது. எப்போதும் வீரத்தோடும் விவேகத்தோடும் தான் பணிபுரிந்துள்ளார். தற்போதுதான் காவல்துறை மீது தாக்குதல் நடைபெறுவதாக கூறுவது தவறு 1856 ஆண்டிலிருந்து காவல்துறை மீது தாக்குதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என்பதுதான் முக்கியம் இறந்த பூமிநாதன் உயிர்த்தியாகம் செய்து கடமையை காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ரோந்து பணியில் செல்பவர்கள் கைத்துப்பாக்கி ஆறு தோட்டாக்கள் எடுத்து செல்வதற்கு அறிவித்துள்ளோம்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் உயிரை காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளோம். மேலும் சிறுவர்கள் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் பல முயற்சிகள் நடக்கிறது, 52 சீறார் கிளப்புகள் ஆரம்பிப்பதற்கு திட்டம் போய்க் கொண்டுதான் இருக்கிறது. விசாரணையில் குற்றவாளி மணிகண்டன் மது அருந்தி இருந்துள்ளார். இந்த கொலைக் குற்றத்தில் மூன்று பேர்தான் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை குற்றத்தில் ஆதாரத்தின் அடிப்படையில் புலன் விசாரணை நடைபெற்றுள்ளது. இதில் சந்தேகத்திற்கு இடமில்லை இவர்கள்தான் கொலை செய்துள்ளனர் என கூறினார்.
ALSO READ: திருச்சி போலீஸ் கொலை : 2 சிறுவர்கள் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR