மக்களே... சென்னை மின்சார ரயில் சேவையில் சில மாற்றம்!

பராமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் நாளை சென்னையில் மின்சார ரயில் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது!

Last Updated : Feb 1, 2019, 10:21 AM IST
மக்களே... சென்னை மின்சார ரயில் சேவையில் சில மாற்றம்! title=

பராமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் நாளை சென்னையில் மின்சார ரயில் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது!

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது. 

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று(வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை(சனிக்கிழமை) சில மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி...

ரத்து செய்யப்படும் ரயில்கள்:

  • காலை 6.40 மணி - ஆவடி-மூர்மார்க்கெட் 
  • இரவு 9.50 மணி - மூர்மார்க்கெட்-ஆவடி 
  • இரவு 7.55 மணி - சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் 
  • காலை 7.45 மணி - மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை, ஆகிய ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

சிறப்பு ரயில்: மதியம் 12, 6.35 மணிக்கு சூலூர்ப்பேட்டை-மூர்மார்க்கெட் வழித்தடத்தில் இயக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News