டி.டிவி தினகரன் வி.கே சசிகலாவை சந்திக்க பெங்களூர் வந்துள்ளார்!!

டி.டிவி தினகரன் சசிகலாவை சந்திக்க பெங்களூரில் உள்ள அக்ரஹாரா மத்திய சிறைக்கு தற்போது வருகை புரிந்துள்ளார்.

Last Updated : Dec 28, 2017, 12:38 PM IST
டி.டிவி தினகரன் வி.கே சசிகலாவை சந்திக்க பெங்களூர் வந்துள்ளார்!!  title=

டி.டிவி தினகரன் சசிகலாவை சந்திக்க பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு தற்போது வருகை புரிந்துள்ளார்.

கடந்த வருடம் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான தேர்தல் இந்த மாதம் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 50.32 சதவீதம் வாக்குகள் பெற்று டிடிவி தினகரன், ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம் பெற்றார்.

இந்நிலையில்,வரும் 29-ம் தேதி டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்க உள்ளார். சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். 

வெற்றியை தொடர்ந்து, சசிகலாவை சந்திக்க டி.டிவி தினகரன் தற்போது பெங்களூர் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு வந்துள்ளார். 

Trending News