ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக, காங்கிரஸ், தேமுதிக மற்றும் நாம் தமிழர் சுயேச்சை வேட்பாளர்கள் என 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 52 வாக்குப்பதிவு மையத்தில் 238 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக 1430 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 286 கட்டுப்பாட்டு கருவிகள் 310 பிபி பேட் கருவிகள் தேர்தல் அலுவலர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக சம்பத் நகரில் உள்ள அம்மன் பள்ளியில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி தனது மனைவி பிரிதிஷா உடன் வாக்காளர்களுடன் நீண்ட வரிசையில் நின்று 96வது வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மாதிரி வாக்குபதியின் போது ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டதில் உடனடியாக சரி செய்து மாற்று இயந்திரம் வைக்கப்பட்டது. 77 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் எவ்வித சிரமமின்றி காலதாமதம் இன்றி வாக்காளர்கள் வாக்கு பதிவு செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேர்தல் கண்காணிப்ப அலுவலர்களும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி நூறு சதவீத வாக்கு பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 238 வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர்கள் வாக்களிக்க வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தேமுதிக வேட்பாளர் எஸ்.ஆனந்த், BP அக்ரஹாரம் பகுதியில் உள்ள , மதரஸா ஹிதாயத்துல் இஸ்லாம் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், தனது வாக்கினை பதிவு செய்தார். இதனையடுத்து, வாக்குச்சாவடி அலுவலர் குளோத்துங்கன், வாக்களிக்க வரும் அனைவரும் கட்டாயமாக வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என நிர்பந்தம் செய்து வாக்களிக்க வந்த மக்களளை வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் தேமுதிக வேட்பாளர் ஆனந்திடம் முறையிட்டதை அடுத்து, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், சம்பந்தப்பட்ட அலுவலரிடம், நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மதியம் வரை ஏதேனும் ஒரு ஆவணங்களின் அடிப்படையில் வாக்களிக்க அனுமதிப்பதாக உறுதியளித்தார். அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, வாக்களார்கள் வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், வாக்குச்சாவடி அலுவரின் இந்த அறிவிப்பால்,வாக்காளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் படிக்க | தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்? கமிஷனர் ரகசிய டெல்லி பயணம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ