பிரதமர் நரேந்திர மோடி, திருமணங்களுக்கு மிகவும் விருப்பமான இடமாக தென்னிந்தியாவும், திருமண சுற்றுலாவின் வளர்ச்சியும் பற்றி உரையாடியதன் மையக்கருவை அடிப்படையாகக் கொண்டு 'வெட்டிங் வோவ் வி கனெக்ட் 2023' எனும் ஆசியாவின் பிரமாண்டமான சர்வதேச தொழில்முறை திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் திருமணம் செய்ய ஏற்ற சுற்றுலாதலங்களை விளம்பரப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாடு இம்முறை மாமல்லபுரத்தை பிராதனப்படுத்தும் நோக்கில் நடைப்பெற்று வருகிறது. இந்தியாவை மையமாகக் கொண்டு உலகெங்கிலும் உள்ள திருமணத் துறையில் வளர்ச்சி மற்றும் புதுமைகளை இயக்க உதவுவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டது.
மாநாட்டின் 3 ஆம் நாளான்று 101 பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகள் ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது கின்னஸ் சாதனையாகவும் பதிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தொழில்முறை திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாட்டில் டபிள்யூ.வி. கனெக்ட் சார்பில் மணப்பெண் ஆடை வடிவமைப்பாளர் மற்றும் சுப நிகழ்வுகளுக்கான ஆடை வடிவமைப்பாளர்களுக்கான ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இதில் மணமகன் மற்றும் மணமகளுக்கான பிரத்யேக ஆடைகள் மற்றும் திருமண விழாக்கோல ஆடைகள் அணிந்து ஆண்களும் பெண்களும் ஒய்யார நடைபோட்டனர். இந்த ஃபேஷன் ஷோவில் நடிகர் சாய் சித்தார்த், நடிகைகள் தேஜு அஸ்வினி, மீனாட்சி கோவிந்தராஜன் உட்பட 17 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் கலந்து கொண்டனர்.
45 வித ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஆடை வடிமைப்பாளர் ஸ்வாதி புருஷோத்தமனுக்கு இந்த ஆண்டின் சிறந்த மணப்பெண் ஆடை வடிவமைப்பாளர் மற்றும் சுப நிகழ்வுகளுக்கான ஆடை வடிவமைப்பாளர் ஆகிய 2 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக மாநாட்டின் 3 ஆம் நாளன்று நடைபெற்ற திருமணத்தில், 101 புதுமண தம்பதிகளுக்கும், தாலி, பட்டுப்புடவை, வேட்டி சட்டை, 1 மாதத்திற்கு தேவையான சமையல் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், படுக்கை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.
பொருளாதாரத்தை தாண்டி ஒவ்வொருவரின் திருமண கனவையும் நிறைவேற்றவும், திருமணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக டபிள்யூ.வி. கனெக்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட்டுக்கு பிந்தைய உரையில், தற்காலத்தில் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர குடும்பத்தினர் திட்டமிட்ட திருமணங்களைத் தேர்வு செய்கிறார்கள் என்றும் இது பல்வேறு மாநிலங்களில் தங்கள் திருமண விழாவை நடத்த மக்களை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் குஜராத் மக்கள் தமிழ்நாடு பாணியில் திருமணங்களை நடத்த விரும்புகின்றனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | தலைசிறந்த திருமண தலமாக உருவெடுக்கவுள்ள மாமல்லபுரம்: முழு முனைப்பில் பணிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ