FAST45 - ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்...

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக, ஒரு நிமிட வாசிப்பிற்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. 

Written by - | Edited by - Mukesh M | Last Updated : Dec 19, 2019, 06:51 AM IST
FAST45 - ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்... title=

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக, ஒரு நிமிட வாசிப்பிற்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. 

  • 2 நாளில் 5 முறை பாக் அத்துமீறல்… 2 இந்திய வீரர்கள் வீரமரணம்… பதிலடியில் பாக் படையினர் 3 பேர் பலி
  • தில்லி வன்முறைக்கு கேஜ்ரிவால் விளக்கம்… ஆம் ஆத்மி வெற்றி நிச்சயம் என்பதால் எதிர்க்கட்சிகள் வீண்பழி சுமத்துவதாக பதில்
  • சைரிஸ் மிஸ்திரிக்கு சாதகமாக என்கிளாட் தீர்ப்பு...டாடா சன்ஸ் தலைவராக மீண்டும் நியமிக்க உ்த்தரவு...
  • தில்லியில் கடும்குளிர்… குறைந்த வெப்பநிலை நேற்று 7 டிகிரி … இன்றும் குளிர் வாட்டுமென தகவல்
  • லக்னோவில் போலீஸ் அதிரடி… சமூகதலங்களில் வெறுப்புணர்வை தூண்டியதாக 3 பேர் கைது
  • உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவு அமல்... பிள்ளைகள் போராட்டத்தில் பங்கெடுப்பதை தடுக்க பெற்றோருக்கு  டிஜிபி அறிவுறுத்தல்
  • குடியுரிமை சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் யோகி எச்சரிக்கை... உத்தரப்பிரதேசத்தில் வன்முறைக்கு இடமில்லை என அறிவிப்பு
  • காஜியாபாத்தின் டாஸ்னால் போலீஸார் மீது தாக்குதல்… சுங்கவரிக்கட்டணம் கேட்டதால் தகராறு 
  • உத்தரப்பிரதேசத்தில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை… விசாரணைக்கு ஆட்சியர் உத்தரவு
  • லக்னோ லோக்னோவை அதிருப்தி பாஜக எம்எல்ஏ புறக்கணிப்பு… அதிகாரிகள் மீது முதல்வரிடம் புகார் அளிக்க முடியாததால் கோபம்
  • உத்தரப்பிரதேசம் ராம்பூர் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... 6 மாதத்துக்குள் விசாரித்து குற்றவாளிக்கு மரணதண்டனை
  • குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அமரோகாவில் தர்ணா… அனுமதியின்றி பேரணி சென்றவர்கள் மீது போலீஸார் தடியடி
  • பிஜ்னோர் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு…உத்தரப்பிரதேச தலைமைச்செயலர், டிஜிபி நேரில் ஆஜராக அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு
  • மீரட்டில் சாலையில் சென்ற சிறுமிகளிடம் சில்மிஷம்... குற்றவாளிகளை பொதுமக்கள் பிடித்துவைத்து சரமாரி அடி
  • 4 அதிகாரிகள் உபாயத்தில் ஆட்சி செய்ததாக முந்தைய சிவராஜ் சிங் அரசு மீது மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத் நையாண்டி... தேர்தல் வாக்குறுதிகளை தாம் நிறைவேற்றுவதாக பெருமிதம்
  • போபாலில் பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம்... கமல்நாத் அரசை பேரவையில் எதிர்க்க வியூகம் 
  • மத்தியப்பிரதேச மாஜி எம்பி சுரேந்தக்கு ஆறு மாத சிறை தண்டனை… பண மோசடி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
  • சத்தீஸ்கர் நாட்டியவிழாவுக்கு அழைப்பு தராததால் முதல்வர் பூபேஷ் பாகெலுக்கு மத்திய அமைச்சர் ரேணுகா சிங் கண்டனம்... மரபை புறக்கணிப்பது காங்கிரஸ் பாரம்பரியம் எனக் குற்றச்சாட்டு
  • குவாலியர் நில மாபியா மீது மீண்டும் அதிரடி… காங் தலைவர் சகாப்சிங் குஜார் 3 மாடி வீட்டை இடிக்க நடவடிக்கை
  • மத்தியப்பிரதேசத்தில்  மாவட்ட நீதிபதி பெயரில் 30 லட்ச ரூபாய் மோசடி... தாமோ கூலிப்படை குவாலியரில் கைது 
  • மத்தியப்பிரதேச விவசாயிகள் உரத்தட்டுப்பாட்டால் அவதிப்படுவதாக சிவராஜ்சிங் குற்றச்சாட்டு… அரசை கண்டித்து பாஜக பேரணி… நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டாம் என காங் அமைச்சர் சச்சின் யாதவ் பதிலடி
  • போபாலில் மும்பை மாடல் அழகிகளுக்கு பாலியல் தொல்லை… போலீஸில் புகார்… பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த இடத்தில் சோகம்
  • சத்தீஸ்கரில் 16வது மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் மும்முரம்...  ஆட்சியர் உள்பட 62 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் பயிற்சி தொடக்கம் 
  • போபாலில் 9-ஆவது நாளாக கௌரவ விரிவுரையாளர்கள் ஸ்டிரைக்… கல்வி அமைச்சர் கருணையைப் பெற சிறப்பு யாகம்… உண்ணாவிரதம் இருந்த இருவர் நிலைமை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதி
  • பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய ஜனதா தளம போஸ்டர் யுத்தம்… பயம் வெர்சஸ் நம்பிக்கை என்ற கருத்தில் பரபரப்பு போஸ்டர்கள் ரிலீஸ்
  • கயையில் பிகார் அமைச்சரவை கூட்டம் நிறைவு.. கங்கை குடிநீர் உள்பட 29 முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல்
  • ராஜஸ்தானில் ஜனதா கிளினிக்கை முதல்வர் கெல்லாட் திறப்பு … பெண்கள் மேம்பாட்டு திட்டம் தொடக்கம் 
  • ராஜஸ்தானில் முதல் கிரேடு ஆசிரியர்கள் தர்ணா ஆசிரியர் தகுதித்தேர்வு தேதியை நீட்டிக்கக் கோரிக்கை. பாஜக நிர்வாகிகளிடமும் வலியுறுத்தல்  
  • ஜோத்பூர் நீதிமன்றத்தில் மான் வேட்டை வழக்கு இன்று விசாரணை.. 5 வருட சிறைத்தண்டனையை ரத்துசெய்ய நடிகர் சல்மான்கான் மனு
  • ராஜஸ்தானின் பிவாடியில் தங்கக்கட்டி தருவதாக கூறி பணம் பறிப்பு… மோசடி கும்பலுக்கு கிடுக்குப்பிடி
  • ஹைதராபாத் உணவகங்களில் பிளாஸ்டி பைகளுக்கு தடை... வாழை இலையில் உணவு அளிப்பதால் வாடிக்கையாளர்கள் பாராட்டு
  • பெங்களூரில் உலகப்புகழ் கேக் ஷோ… விதவிதமான ராட்சத கேக்கை பார்த்து மக்கள் குஷி
  • பெங்களூரு கேக் ஷோவில் மக்களை ஈர்க்கும் வண்ண வண்ண கேக்குகள்… குழந்தைகள் உற்சாகம்
  • 2017-ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 32,559 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என இந்தியாவில் குற்றங்கள் தொடர்பான தேசிய குற்ற பதிவு பணியகத்தின் (NCRB) சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
  • குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இது வெளிநாட்டினருக்கானது மட்டுமே என ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
  • உத்தரபிரதேசத்தில் கோர்ட்டு அறைக்குள் கைதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் அலட்சியமாக இருந்ததற்காக 18 போலீஸ்காரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்
  • குஜராத்தை சேர்ந்த ஹசன் சபீன் 22 வயதில் இந்தியாவின் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாகி சாதனை படைத்துள்ளார்.
  • மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி...
  • மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், குல்தீப் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை.
  • வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகை இலியானா-விடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிப்பில் உருவகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் பிலிம் சிட்டியில் தொடங்கியது.
  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மம்முட்டி, கார்த்திக் சுப்புராஜ், துல்கர் சல்மான், அமலாபால் உள்ளிட்ட திரை பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
  • குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இடதுசாரிகள் தலைநகர் தில்லி உள்பட இன்று நாடு தழுவிய  ஆர்ப்பாட்டம்… காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை 
  • மும்பையின் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக பல்வேறு கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்… காங்கிரஸ், என்.சி.பி, சமாஜ்வாடி கட்சி மற்றும் பல முஸ்லிம் அமைப்புகள் இதில் பங்கேற்பு... பாலிவுட்டின் பல பிரபல நட்சத்திரங்களும் கலந்து கொள்ள திட்டம் 
  • இந்தியாவின் அகதிகள் தொடர்பாக ஜெனீவாவில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேசியதற்கு இந்தியா பதிலடி... இந்தியாவின் உள் விஷயங்களை எழுப்புவதன் மூலம் சர்வதேச அரங்கை இம்ரான் கான் தவறாக பயன்படுத்தினார் என்று இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

Trending News