பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த மருத்துவர் சுப்பையா கைது!

பக்கத்து வீட்டுவாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் சென்னையில் கைது செய்யப்பட்டார்.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 19, 2022, 07:24 PM IST
  • பார்க்கிங் பிரச்சனையில் பக்கத்துவீட்டில் சிறுநீர் கழித்த ஏபிவிபி மருத்துவர்
  • 2 ஆண்டுகளுக்கு மருத்துவர் சுப்பையா சண்முகம் கைது
  • கீழ்ப்பாக்கம் புற்றுநோய்த்துறை தலைவர் பதவியில் இருந்தும் நீக்கம்
பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த மருத்துவர் சுப்பையா கைது! title=

ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பின் தேசிய தலைவராக இருந்தவர் சுப்பையா சண்முகம். இதுமட்டுமல்லாமல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகவும் இவர் பணிபுரிந்துவந்தார். 

நடந்தது என்ன ?

கடந்த 2020ம் ஆண்டு மருத்துவரான சுப்பையா செய்த காரியம், தமிழகத்தையே முகம் சுளிக்க வைத்தது. 
சென்னை நங்கநல்லூர் ராம் நகர் 3வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  210வது பிளாட்டில் வசித்து வருபவர் சந்திரா சம்பத். அதே குடியிருப்பில் 110வது பிளாட்டில் சுப்பையா சண்முகம் வசித்து வருகிறார். சந்திரா சம்பத்தின் கார் பார்க்கிங்கில், தொடர்ந்து மருத்துவர் சுப்பையா நிறுத்திவந்ததால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் சந்திரா சம்பத்தை அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | மீண்டும் மீண்டும் கைது: இறுகும் அரசின் பிடி

இந்த சண்டைக்கு பழிதீர்க்கும் விதமாக மருத்துவர் சுப்பையா, சந்திரா சம்பத்தின் வீட்டுவாசலில் சிறுநீர் கழித்துள்ளார். அத்துடன் குப்பைகளையும் வீட்டுவாசலில் போட்டுள்ளார்.  அங்குள்ள சிசிடிவி காட்சியில் இந்த நிகழ்வுகள் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை கடும் கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் சந்திரா சம்பத் புகார் அளித்தார். ஆனால், விசாரணைக்கு போலீஸார் அழைத்தும் சுப்பையா ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து, அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக சுப்பையா கைது செய்யப்படாமல் இருந்துவந்தார். 

மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பு போராட்டம்

இதற்கிடையில், தஞ்சையில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரத்தில் மத மாற்றம் காரணமாகத்தான் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறி மாணவர்கள் சிலர் சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விசாரணையில் அவர்கள் மாணவர்களே இல்லை என்பதும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கிளை அமைப்பான ஏபிவிபி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்தனர்.

Image Of ABVP

 

இந்நிலையில், ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவருமான சுப்பையா சண்முகம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததும், அவர்களுக்கு உதவியதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. மேலும், சிறையில் அடைக்கப்பட்ட அவர்களை, மருத்துவர் சுப்பையா நேரில் சென்று சந்தித்துவிட்டு வந்தார். அரசு பணியில் இருந்து கொண்டு முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்தவர்களுக்கு உதவியது அரசுக்கு எதிரான செயல் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் கண்டனம் தெரிவித்தது. மேலும், மருத்துவர் சுப்பையாவை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய்த்துறை தலைவர் பதவியில் இருந்தும் நீக்கியது. 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கைது!

இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்து வீட்டில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக மீண்டும் மருத்துவர் சுப்பையா சண்முகத்திடம் ஆதம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று கைது செய்தனர். அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தற்போது போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அறநிலையத்துறையின் கட்டுப்பாடு யார் கையில்? ஆர். எஸ். எஸ்? தமிழக அரசு? – சீமான் கேள்வி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

 

 

Trending News