அரசு ஊழியர்கள் துப்பட்டா போட்டு தான் பணிக்கு வரவேண்டும்: தமிழக அரசு அதிரடி

அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஆடை அணியும் விஷயத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது தமிழக அரசு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 1, 2019, 02:03 PM IST
அரசு ஊழியர்கள் துப்பட்டா போட்டு தான் பணிக்கு வரவேண்டும்: தமிழக அரசு அதிரடி title=

சென்னை: அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் சுடிதார் அணியும்போது கண்டிப்பாக துப்பட்டா போட்டிருக்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதுக்குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒழுக்கமான சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சேலை அல்லது சல்வார் கமீஸ் போன்ற ஆடைகளை அணிந்து வரலாம். சுடிதார் மற்றும் சல்வார் கமீஸ் அணிந்து வருபவர்கள் கட்டாயமாக துப்பட்டா போட வேண்டும். ஆண் ஊழியர்கள் கேஷுவலாக இல்லாமல் பார்மலான  பேண்ட், சட்டை போன்ற நல்ல உடைகளை அணிந்து பணிக்கு வர வேண்டும். 

நீதிமன்றம் அல்லது நீதித்துறை சார்ந்த மன்றங்களில் அரசு  ஊழியர்கள் செல்ல நேர்ந்தால் ஆண்கள் கோட் அணிந்து செல்லவேண்டும். திறந்த வகையிலான கோட் அணிபவர்கள் கண்டிப்பாக டை அணிய வேண்டும். அதேபோல பெண்கள் புடவை மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சல்வார் கமீஸ் அணிய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Trending News