மதுபோதையில் இருந்த மணமகனை மணக்க மறுத்த மணமகள்!

தாலி காட்டும் நேரத்தில் மணமகன் மது போதையில் இருந்ததால் மணமகள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து மாலையை கழட்டி வீசியெறிந்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  

Last Updated : Dec 11, 2021, 01:19 PM IST
மதுபோதையில் இருந்த மணமகனை மணக்க மறுத்த மணமகள்! title=

தருமபுரி :  தாலி காட்டும் நேரத்தில் மணமகன் மது போதையில் இருந்ததால் மணமகள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து மாலையை கழட்டி வீசியெறிந்த சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  மணமேடை வரை சென்று பல திருமணங்கள் நின்றுள்ளது.  வரதட்சணை, மணமகனுக்கு வேறு பெண்ணுடன் காதல் அல்லது மணமகளுக்கு வேறு ஆணுடன் காதல், குடும்ப சண்டை, சகுன தடை போன்ற பல காரணங்களால் திருமணம் நின்று போயிருக்கிறது.  அந்த வகையில் மது மோகத்தால் மதி மயங்கி கிடந்த மாப்பிள்ளையால் திருமணம் நின்று போன சம்பவம் அப்பகுதியில் ஆதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தருமபுரி மாவட்டம் தொட்டப்பட காண்ட அள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(32).  இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.  இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இருவீட்டார் சம்மதத்துடனும் திருமணம் செய்வதாய் நிச்சயிக்கப்பட்டு திருமண தேதி குறிக்கப்பட்டு திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.  அதன்படி திருமணம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வஜ்ஜிரப்பள்ளம் என்கிற பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் நேற்று காலை 6 மணியளவில் நடப்பதாய் நிச்சயம் செய்யப்பட்டது.  அதனையடுத்து மணமகளை அலங்கரித்து பெண் வீட்டார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் படை சூழ திருமணம் நடைபெறும் ஈஸ்வரன் கோவிலுக்கு வந்தனர்.

ALSO READ | வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அரசு மகளிர் விடுதியா?

ஆனால் அந்த கோவிலில் மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் கூட இல்லை.  இதனை கண்டு குழப்பமடைந்து மாப்பிள்ளை வீட்டிற்கு சென்ற பெண் வீட்டாருக்கு பெரிய இடி காத்திருந்தது.  அங்கு மாப்பிள்ளை மது போதை தலைக்கேறி நிதானமற்று வீட்டிற்குள் கிடந்துள்ளார்.  இதனை பார்த்த பெண் வீட்டார் அதிர்ந்தனர், வருங்கால கணவனின் இந்த நிலையை கண்ட மணப்பெண் 'எனக்கு இந்த மாப்பிள்ளையும் வேண்டாம், திருமணமும் வேண்டாம், நான் இவனை கட்டிக்கொண்டால் என் வாழ்க்கை நாசமாகிவிடும்'  என்று கூறி அழுதுகொண்டே தனது கழுத்தில் கிடந்த மாலையை கழற்றி தூக்கி வீசிவிட்டு மணமகனின் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதனையடுத்து மணமகனின் வீட்டார் எவ்வளவோ சமாதானம் செய்தும் பேணும், பெண்ணின் வீட்டாரும் சமாதானம் அடையவில்லை.  இதுகுறித்து பெண் வீட்டார் மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தனர்.  அதில் திருமணத்திற்காக நாங்கள் செய்த செலவை மாப்பிள்ளை வீட்டார் எங்களுக்கு தர வேண்டும் என்று கூறினர்.  இருப்பினும் மாப்பிள்ளை அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு போலீசிடம் வேண்டினார்.  அதற்கு போலீசார் பெண்ணின் ஒப்புதல் வேண்டும், அதனால் அவரிடம் சம்மதம் கேட்கும்படி கூறினார்.  அதனையடுத்து அவர் அந்த பெண்ணிடம்  'இனிமேல் நான் குடிக்கமாட்டேன், என்னை திருமணம் செய்துகொள்' என்று கெஞ்சினார்.  ஆனால் அந்த பெண் அவரின் கெஞ்சலை நிராகரித்ததோடு உறவினர்களுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

ALSO READ | தமிழகத்தில் தொடரும் கொள்ளை சம்பவம்: அச்சத்தில் மக்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News